மார்ச் 7ல் வெளியாக இருந்த ‘அஸ்திரம்’ படம் ரிலீஸ் தள்ளி வைப்பு!

Asthram  Movie Release Postponed : ஷ்யாம் நடித்திருக்கும் அஸ்திரம் திரைப்படத்தின் தேதி, தள்ளிப்போயுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Mar 5, 2025, 07:35 PM IST
  • அஸ்திரம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
  • மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட இருந்தது..
  • எப்போது ரிலீஸாகிறது..
மார்ச் 7ல் வெளியாக இருந்த ‘அஸ்திரம்’ படம் ரிலீஸ் தள்ளி வைப்பு!

Asthram  Movie Release Postponed : ஷ்யாம் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம், அஸ்திரம். இந்த படத்தின் பத்திரிகையாளர்களுக்கான ஸ்பெஷல் ஷோ நடைப்பெற்றது. இதையடுத்து, இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

வரும் மார்ச்-7ஆம் தேதி இந்த படம் தமிழகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டபோது படம் பார்த்த அனைவரும் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக பாசிட்டிவான விமர்சனங்களையே கூறினார்கள். ஆனாலும் இந்த வாரம் இன்னும் அதிக அளவில் சில படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ‘தியேட்டர் பகிர்வில் ‘அஸ்திரம் படத்திற்கு போதுமான அளவு திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த படம் வெகுவான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை தந்திருக்கும் படக்குழுவினர், அதிக திரையரங்குகள் கிடைக்கும் விதமாக இன்னொரு நாளில் ‘அஸ்திரம்’ படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர். படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

படம் எப்படியிருக்கு?

ஷ்யாம் இந்த படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். வெவ்வேறு சமயங்களில், 3 தற்கொலைகள் ஒரே மாதிரி நடக்கிறது. இதை இன்வஸ்டிகேட் செய்யும் ஷ்யாமுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. அது என்ன? என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் முதல் பாதி, ஒரு நல்ல த்ரில்லர் கதை படித்த உணர்வு தருகிறது. இரண்டாம் பாதியில் எதிர்பாராத ட்விஸ்டுகள் காத்துக்கொண்டுள்ளன. நல்ல த்ரில்லர் படத்தை பார்க்க விரும்பினால், இந்த படத்தை ரிலீஸானவுடன் கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | தனக்கு கொடுத்த பட்டத்தை துறந்த தமிழ் பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

மேலும் படிக்க | நல்ல நாவல் படித்த உணர்வு..ஷ்யாமின் அஸ்திரம் படம் எப்படி? திரை விமர்சனம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News