Actress Soundarya Death Not Accident But Murder : நடிகை சௌந்தர்யா 2004 ஆம் ஆண்டு தனது 31 ஆவது வயதில் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவருடைய உடல் கிடைக்கவில்லை.இந்த நிலையில் அவர் இறப்பு விபத்தல்ல, கொலை என ஆந்திராவை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சௌந்தர்யாவின் விபத்து குறித்த புகார்:
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிட்டிமல்லு. இவர் தனது புகாரில், "நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தால் நடந்தது இல்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார்.
ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார். இந்த நிலையில் சவுந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார். எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என தனது புகாரில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த நில அபகரிப்பு விவகாரத்தில் மோகன் பாபுவை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிட்டிமல்லு குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரால் தனக்கு மோகன் பாபு தரப்பிடம் இருந்து மிரட்டல்கள் வரலாம் என்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இந்த புகார் குறித்து மோகன் பாபுவோ அவரை சார்ந்தவர்களோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சௌந்தர்யாவின் சினிமா வாழ்க்கை:
நடிகை சௌந்தர்யா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்தவர். இவரது உண்மையான பெயர், சௌமியா. தமிழில் பெரிய ஹிட் அடித்த பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பொன்னுமணி படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் முத்துக்காளை, சேனாதிபதி, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ரஜினியுடன் இவர் நடித்த படையப்பா படத்தில் இவரது வசுந்தரா கதாப்பாத்திரம் இன்றளவும் மிக பிரபலம்.
இவரை திரையில் ரசித்து பார்த்தவர்கள், பெரும்பாலானோர் இவர் குடும்ப பெண்ணாக எந்த பாத்திரத்தை ஏற்றாலும் ஸ்கோர் செய்வதாக கூறி வந்தனர். இதற்கிடையில் தெலுங்கு திரையுலகிலும் இவரது ராஜ்ஜியம் தொடர்ந்தது. அங்கும் பல ஸ்டார் நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். உயிரிழப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் தொடர்ந்து கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இறந்தது எப்படி?
நடிகை சௌந்தர்யா, மிக இளம் வயதிலேயே பல நூறு படங்களில் நடித்து பெரிய ஹிட் நடிகையாக மாறினார். இதனால் அரசியல் வாழ்க்கையும் அவரை வரவேற்றது. பாஜக-வில் முக்கிய உருப்பினராக இருந்த இவர், அந்த கட்சி தொடர்பான பிரச்சார விழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து தெலங்கானாவில் இருக்கும் கரிம் நகருக்கு பிரைவேட் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் அவரது அண்ணன் அமர்நாத்தும் பயணித்தார்.
இந்த விமானம் விபத்துக்குள்ளாகி, சௌந்தர்யா உயிரிழந்ததாக இப்போது வரை நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இவரது அரசியல் விரோதிகள்தான் இவரை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதாக சில கான்ஸ்பிரசிக்களும் அவ்வப்போது வைரலாகும். தற்போது, அதற்கு ஏற்ற வகையில் இந்த புகாரும் எழுந்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படலாம் எனக்கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இறப்பதற்கு முன்பு கடைசி ஆசையை தெரிவித்த பிரபல நடிகை..! அப்படியென்ன ஆசை..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









