Singer Kalpana First Video After Hospitalized : பாடகி கல்பனா, 3 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் அதிக தூக்கமாத்திரைகளை சாப்பிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஊடகங்கள் அனைத்தும் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக செய்திகளை பரப்பின. தீவிர சிகிச்சை பெற்ற கல்பனாவின் உடல் நிலை தற்போது தேறி வருகிறது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் முதன்முறையாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
முதன்முறையாக வெளியிட்ட வீடியோ:
பாடகி கல்பனா வெளியிட்டிருக்கும் வீடியோவில், தன்னை பற்றியும் தனது கணவரை பற்றியும் மீடியாக்களில் பலவாராக வதந்திகள் பரவி வருவதால், விளக்கம் கொடுக்கும் வகையில் இந்த வீடியோவை பதிவிடுவதாக தெரிவித்து இருக்கிறார்.
#singerkalpana pic.twitter.com/ZatyUvPuik
— Vinaykumar Nerella (@vinayN95) March 7, 2025
இந்த வயதில் தான் Phd, LLB உள்பட சில விஷயங்களை படித்து வருவதாகவும் தன்னுடைய இசை வாழ்க்கையின் மீதும் கவனம் செலுத்து வருவதாகவும் பேசியிருக்கிறார். இதனால் மன அழுத்தம் அதிகமானதால் தன்னால் தூங்க முடியாமல் போனதாகவும், இதனால் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற போது இன்சோமேனியா பிரச்சனை இருப்பது தெரிய வந்ததாகவும் பேசியிருக்கிறார்.
இதனால் தனக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கொண்டதால், நுரையீரல் பாதிக்கப்பட்டு மயக்க நிலைக்கு சென்று விட்டதாக கூறியிருக்கிறார். இப்போது தான் உயிருடன் இருக்க காரணம் தனது கணவர்தான் என்றும், தன்னை காப்பாற்ற அவர் மிகவும் சிரமப்பட்டதாகவும் பேசியிருக்கிறார். தன் கணவரும், மகளும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறிய அவர், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்து இருக்கிறார். வெகு விரைவில் பூரண குணமடைந்து சீக்கிரமே பாடல் மூலம் அனைவரையும் மகிழ்விப்பேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
தற்கொலை முயற்சி இல்லை!
பாடகி கல்பனாவை மருத்துவமனையில் அனுமதித்ததற்கு அடுத்த நாளே, அவரது மகள் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தனது தாய் தற்கொலை முயற்சி எதையும் மேற்க்கொள்ளவில்லை என்றும், தங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்தார். தற்போது கல்பனா வீடியோவின் மூலம் விளக்கியிருப்பதை, அப்போதே அவர் விளக்கிவிட்டார். இதற்கிடையேதான் சில யூடியூப் சேனல்கள் தவறான செய்திகளை பரப்ப ஆரம்பித்தன. இதுவே கல்பனாவை வீடியோ போட வைத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த கல்பனா?
44 வயதாகும் பாடகி கல்பனா, சென்னையை சேர்ந்தவர். பிரபல பாடகர் டி.எஸ்.ராகவேந்திராவின் மகளான இவர் தமிழ்-தெலுங்கு ஆகிய மொழிகளில் பல நூறு பாடல்களை பாடியிருக்கிறார். பிரபல ரியாலிட்டு ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக இருக்கிறா. தெலுங்கு பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்று கவனம் ஈர்த்துள்ளார்.
மேலும் படிக்க | பிரபல பின்னணி பாடகி கல்பனா விபரீத முயற்சி.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
மேலும் படிக்க | பாடகி கல்பனா தற்கொலை முயற்சியா? உண்மை இதுதான்! அவரது மகள் கொடுத்த விளக்கம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









