விஜய் டிவியில் இருந்து வெளியேறும் ஸ்டார் தாெகுப்பாளர்கள்?! யார் யார் தெரியுமா?

Star Anchors Leaving Vijay TV : விஜய் டிவி-யை ஒரு பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும், இதனால் சில நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு இதிலிருந்து சில ஸ்டார் தொகுப்பாளர்கள் வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 22, 2025, 12:23 PM IST
  • வேறு நிறுவனத்துக்கு கைமாறும் விஜய் டிவி?
  • விலகும் ஸ்டார் தொகுப்பாளர்கள்?
  • யார் யார் தெரியுமா?
விஜய் டிவியில் இருந்து வெளியேறும் ஸ்டார் தாெகுப்பாளர்கள்?! யார் யார் தெரியுமா?

Star Anchors Leaving Vijay TV : சின்னத்திரை ரசிகர்கள், அதிகம் விரும்பிப்பார்க்கும் தொலைக்காட்சிகளுள் ஒன்றாக விளங்குகிறது, விஜய் டிவி. இந்த தாெலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும், தொடர்களும் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதுண்டு. ஆனால், இப்போது இந்த தொலைக்காட்சியை ஒரு பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும், இதனால் இதிலிருந்து சில நிகழ்ச்சிகள் நிறுத்தம் செய்யப்பட போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும், அவை டாப் நிகழ்ச்சிகளாக இருப்பதாகவும், அதில் பணிபுரியும் தொகுப்பாளர்களும் சேனலில் இருந்து வெளியேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரம் என்ன? இங்கு பார்ப்போம்.

விஜய் தொலைக்காட்சியின் டாப் நிகழ்ச்சிகள்:

தமிழ் நாட்டில், நடுத்தர மக்கள் டிவி-க்களை வாங்கி வைக்க ஆரம்பித்தது முதல், தொடங்கப்பட்ட வெகு சில சேனல்களுள் ஒன்று, விஜய் டிவி. இதில் முதலில் வெளிநாட்டு தொடர்களும், இந்தி தொடர்களும் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாகத்தான், அவையனைத்தும் நிறுத்தப்பட்டன. இப்போது, விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்படுவதாக இருப்பது, ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளும், சில தாெலைக்காட்சி தொடர்களும்தான். ஹிட் நிகழ்ச்சிகளாக இருக்கும் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, நீயா நானா உள்ளிட்டவை நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

அரைத்த மாவையே அரைக்கின்றனரா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், அரைத்த மாவையே அரைத்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும், முன்னர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நிறைய பார்வையாளர்கள் இருந்ததாகவும் கடந்த சில வருடங்களாக இதன் டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர தொகுப்பாளர்களாக இருப்பவர்கள் பிரியங்காவும் மாகபா ஆனந்தும்தான். இதில், இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகளை பார்க்கவே பலர் காத்துக்கொண்டிருப்பர். இவர்கள், தனியாக சில மேடை நிகழ்ச்சிகளையும், விஜய் டிவியிலேயே வேறு சில ஷோக்களையும் கூட தொகுத்து வழங்கி வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, கடந்த சில சீசன்களாக, அரைத்த மாவையே அரைத்து வருவதால், இந்த நிகழ்ச்சிக்கு முழுக்கு போட விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, இத்துடன் மாகபா மற்றும் பிரியங்காவும் இதிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நீயா நானா-வுமா?

சமூகத்தில் நடக்கும் பல்வேறு அவலங்களையும் தோலுரித்து காட்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது நீயா நானா. சமீபத்தில் கூட மும்மொழிக்கொள்கை குறித்த விவாதம் ஷூட்டிங் முடிந்ததை தொடர்ந்து, அதனை ஒளிபரப்பு செய்யக்கூடாது என விஜய் டிவிக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, அந்த எபிசோட் ஒளிபரப்பப்படவில்லை. இந்த நிகழ்ச்சி மிக பிரபலமாக காரணமாக இருப்பவர், கோட் போட்ட கோபிநாத்தான். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதை தொடர்ந்து, இப்போது இந்த நிகழ்ச்சி நிறுத்தம் செய்யப்பட இருப்பதாகவும், இதிலிருந்து கோபிநாத் விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

கைமாறிய தொலைக்காட்சி?

டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜியோவுடன் கைக்கோர்த்து ஜியோ ஹாட்ஸ்டாராக மாறிவிட்டது. இந்த நிலையில், ஜியோவுடன் கலர்ஸ் தொலைக்காட்சியும் கைக்கோர்த்து இருக்கிறது. ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி, கலர்ஸில் மறு ஒளிபரப்பு செய்யப்படுவதை தொடர்ந்து, இப்போது விஜய் டிவி-ஐயே இந்த நிறுவனம் நல்ல விளைக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விஜய் டிவியின் லோகோ உள்பட பல விஷயங்கள் இனி மாற்றம் பெறும் என்றும், புத்தம் புது பொலிவுடன் சில நிகழ்ச்சிகள் புதிதாக களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வயதானவரை திருமணம் செய்தாரா பிரியங்கா? இருவருக்குமான வயது வித்தியாசம் தெரியுமா?

மேலும் படிக்க | விஜய் டிவி கிடையாது! இனி ‘இந்த’ சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாம்..எது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News