தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்.. வைரலாகும் வீடியோ

Priyanka Deshpande Marriage : பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா. இவருக்கு இன்று இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 16, 2025, 06:25 PM IST
  • தொகுப்பாளர்களுள் மிகவும் பிரபலமாக இருப்பவர், பிரியங்கா தேஷ்பாண்டே.
  • பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்?
  • வீடியோ மற்றும் போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்.. வைரலாகும் வீடியோ

Priyanka Deshpande Marriage : தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் மிகவும் பிரபலமாக இருப்பவர், பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகளை, இவருக்காகவே பலர் கண்டுகளித்தனர். 100 சதவிகதம் எண்டெர்டெயினராக இருந்து மக்களை சிரிக்க வைக்கும் பிரியங்காவின் வாழ்க்கையிலும் வெளியில் சொல்ல முடியாத சோகங்கள் இருக்கத்தான் செய்கிறது. “இதுவும் கடந்து போகும்” எனும் எண்ணத்துடன் அனைத்தையும் கடந்து போகும் இயல்பை கொண்டவர், பிரியங்கா தேஷ்பாண்டே. 

Add Zee News as a Preferred Source

பிரியங்கா தேஷ்பாண்டே:
வெளி மாநிலத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், சென்னையில் பள்ளிப்படிப்பை தொடர்ந்ததால் பிரியங்காவிற்கு தமிழ் மொழி, சரளமாக வந்தது. இவர் தொகுத்து வழங்கி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், தி வால் உள்ளிட்டவை, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை ஆகும். இவர் தொகுப்பாளினியாக வளர்ந்து வந்த காலங்களில், இவருக்கு முன்பிருந்த டிடியின் நிகழ்ச்சிகள் முடிந்து போக, பிரியங்காவிற்கு ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, பல்வேறு விருது நிகழ்ச்சிகளையும் மேடை நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார். 

பிக்பாஸ் மற்றும் குக்கு வித் கோமாளி பிரியங்கா..
பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் முக்கிய போட்டியாளராக பிரியங்கா பங்கேற்றார். அந்த வீட்டிற்குள் இருந்த 100 நாட்களும் மக்களை பல வகைகளில் மகிழ்வித்து, அனைவரது மனங்களிலும் இடம் பிடித்தார். இறுதியில், ரன்னர் அப் பட்டத்தையும் வென்றிருந்தார். 

அதேபோல் பிரியங்கா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் வின்னராக வெற்றி பெற்றார்.

முதல் திருமணம் விவாகரத்து:
பிரியங்கா தேஷ்பாண்டே, 2016 ஆம் ஆண்டு தனது நெடுங்கால காதலரான பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததாக 2022ஆம் ஆண்டு தகவல்கள் வெளியானது. ஆனால், இவை அனைத்தும் வெறும் வதந்தியே என்று கூறிவிட்டார் பிரியங்கா. சமீபத்தில் தொகுப்பாளர் அர்ச்சனா, சில விஷயங்களை பேசும் போது, நா தழுதழுக்க பேசினார். “உன் வாழ்வில் வரும் ஒருவன், கண்டிப்பாக உன்னை முழுமையாக காதலித்து, உனக்கு நிறைய குழந்தை செல்வங்களை கொடுக்க வேண்டும்” என்று அர்ச்சனா அவரை வாழ்த்தினார். இதனால், பிரியங்கா அவரது கணவரை விட்டு பிரிந்ததை ரசிகர்கள் அனைவரும் உறுதிப்படுத்தினர். ஆனால் இது குறித்து பிரியங்கா இதுவரை வாய் திறக்கவில்லை. 

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்?
இந்நிலையில் தற்போது பிரியங்காவிற்கு இன்று வசி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எனினும் இதுகுறித்து பிரியங்கா தேஷ்பாண்டே எந்த தகவலையும் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கணவரிடம் வரதட்சணை வாங்கிய ரம்யா பாண்டியன்! அதற்கு காரணம் இதுதான்..

மேலும் படிக்க | நடிகர் ஸ்ரீ-க்கு இப்படியொரு நோயா? இப்போது எங்கு இருக்கிறார்? நண்பர் சொன்ன தகவல்.. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News