விஜய்யின் சச்சின் படம் ரீ-ரிலீஸ்! எந்த தேதியில்? எப்போது தெரியுமா?

Vijay Sachein Re Release Date : தளபதி விஜய் நடிப்பில் உருவான படம், சச்சின். இந்த படம் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அது எப்போது தெரியுமா?

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 14, 2025, 02:27 PM IST
  • சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ்
  • எப்போ ரிலீஸ் தெரியுமா?
  • திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு
விஜய்யின் சச்சின் படம் ரீ-ரிலீஸ்! எந்த தேதியில்? எப்போது தெரியுமா?

Sachein Movie Re Release Date: தமிழ் திரையுலகில் எத்தனை திரைப்படங்கள் வெளி வந்திருந்தாலும், ஒரு சில படங்கள் மட்டுமே அனைவரையும் கவர்ந்த திரைப்படமாக இருக்கும். அப்படிப்பட்ட அனைவரையும் கவர்ந்த திரைப்படம் தான் சச்சின். விஜய், ஜெனிலியா, மற்றும் வடிவேலு நடித்த சச்சின் படம், 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம்  இளையர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கல்லூரி பருவ காதலை மிக அழகாக காட்டி இருப்பார் இயக்குநர் ஜான் மகேந்திரன்.

Add Zee News as a Preferred Source

இந்த படத்தில் விஜய் (Thalapthy Vijay) மற்றும் ஜெனிலியாவின் கெமிஸ்ட்ரி (Genelia D'souza) மிகவும் இயல்பாகவும், அழகாகவும் அமைந்திருக்கும். இந்த படத்தில் விஜய் 'சச்சின்' (Sachein) என்ற கதாபாத்திரத்திலும் ஜெனிலியா ஷிர்யா கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இவர்களைத் தவிர இந்த படத்தில் ரகுவரன், வடிவேலு, சந்தானம், பிபாஷா பாசு என நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு டிஎஸ்பி இசையமைத்திருந்தார். டிஎஸ்பி இன் இசை குறிப்பாக ‘கண்ணா…’, ‘இடியட்’ பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்!. திரைப்படத்தின் கதை சாதாரணமாக இருந்தாலும், இசையும் திரைக்கதையுடன் பிணைந்து ஓர் இனிய அனுபவத்தை வழங்கி இருக்கும். குறிப்பாக இந்த படத்துல வடிவேலு காமெடி (ஐயா சாமி) இன்று வரை பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 2005 ஆம் ஆண்டில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றியடைந்த இப்படத்தை, தற்போது 20 ஆண்டுகள் கழித்து தயாரிப்பாளர் தாணு ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறது. அந்த வகையில் வருகிற வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி உலகளவில் சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த படத்தை மீண்டும் திரையில் கண்டு மகிழ ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். 

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது ரீ ரிலீசாக இருக்கும் சச்சின் திரைப்படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர் தாணு தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிங்க: திடீரென வைரலான தொட்டு தொட்டு பேசும் சுல்தானா! இந்த பாடல் எந்த படம் தெரியுமா?

மேலும் படிங்க: ஜிவி பிரகாஷ் - சீனு ராமசாமி கூட்டணியில் வெளியாகும் இடிமுழக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News