சச்சின் ரீ-ரிலீஸ் முதல் நாள் வசூல்! குட் பேட் அக்லி படத்தை தூக்கி சாப்ட்ருமோ?

Sachien Movie Re Release First Day Collection : விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

Written by - Yuvashree | Last Updated : Apr 18, 2025, 07:39 PM IST
  • சச்சின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!
  • குட் பேட் அக்லி-யை விட அதிகமா?
  • எவ்வளவு தெரியுமா?
சச்சின் ரீ-ரிலீஸ் முதல் நாள் வசூல்! குட் பேட் அக்லி படத்தை தூக்கி சாப்ட்ருமோ?

Sachien Movie Re Release First Day Collection : விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. இன்றைய குட் பேட் அக்லி படத்தின் கலக்ஷனை விட, சச்சின் வசூல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சச்சின் திரைப்படம்:

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தமிழ் ரொமாண்டிக் காமெடி திரைப்படங்களுள் ஒன்று, சச்சின். இந்த படத்தில், விஜய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருப்பார். இப்படம், 2005ஆம் ஆண்டு வெளியான போது குழந்தையாக திரையரங்குகளில் இப்படத்தை பார்க்க நினைத்தவர்கள், வளர்ந்த பின்பும் இதனை தியேட்டரில் பார்க்க ஆவலுடன் இருந்தனர். இதையடுத்து, ஏப்ரல் 18ஆம் தேதியான இன்று, இப்படம் பல திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இதன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

முதல் நாள் வசூல்!

நடிகர் விஜய்யை, தமிழ் நாட்டில் பலர் சமீப காலமாக ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’ என்று அழைப்பதுண்டு. அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது ஒரு காரணம் என்றாலும், இவர் படங்கள் பெரும்பாலும் போட்ட பட்ஜெட்டை எடுத்து விடும். அது மட்டுமல்ல, இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள், முதல் நாள் விமர்சனம் வருவதற்கு முன்னரே, ப்ரீ-புக்கிங்கில் அதிக வசூல் பெருவது வாடிக்கையாகி வருகிறது. வேறு எந்த நடிகரின் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் போதும், விஜய்க்கு கிடைக்கும் அந்த முதல் நாள் வசூல் அவர்களுக்கு கிடைப்பதில்லை. சச்சின் படமும், தற்போது புனித வெள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, இப்படம் ப்ரீ-புக்கிங்கில் மட்டும் சுமார் ரூ.12 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மாலை நிலவரப்படி, தமிழகத்தில் மட்டூம் சச்சின் படம் சுமார் ரூ.6 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகை, இரவு காட்சியுடன் சேர்த்தால் ரூ.10 கோடியை தாண்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, நாளை (சனி) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிறு) என்பதால் அந்த நாளுக்கான புக்கிங்கும் ஃபுல் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. 

குட் பேட் அக்லியை தூக்கி சாப்பிடுமோ?

அஜித் நடிப்பில் தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியான படம், குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இது முழுக்க முழுக்க அஜித்தின் ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்ட படமாகும். புனித வெள்ளியான இன்று, சச்சின் படத்திற்கு அதிக கூட்டம் சென்றதாகவும், குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூல் இன்று குறைந்து காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சச்சின் படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோ ஆக வேண்டியவர்! இப்போ இறந்துட்டாரு..யார் தெரியுமா?

மேலும் படிக்க | சச்சின் ஒரிஜினல் ரிலீஸின் போது தோல்வி! காரணம் ‘இந்த’ படத்தின் ரிலீஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News