வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்னதான் பிரச்சனை? முழு விவரம்..

Veera Dheera Sooran Part 2 Release Issue : விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் வீர தீர சூரன்-பாகம் 2 ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 27, 2025, 12:47 PM IST
  • வீர தீர சூரன் 2 படத்திற்கு இடைகால தடை
  • படம் எப்போது வெளியாகும்?
  • விசாரணையின் முடிவு என்ன?
வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்னதான் பிரச்சனை? முழு விவரம்..

Veera Dheera Sooran Part 2 Release Issue : இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் ஒன்று, வீர தீர சூரன் பாகம் 2. சித்தா படத்தின் இயக்குநர் அருண் குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம், மார்ச் 27ஆம் தேதியான இன்று வெளியாக இருந்ததை ஒட்டி, இந்த படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து முழுமையாக பார்க்கலாம்.

Add Zee News as a Preferred Source

விர தீர சூரன் பாகம் 2:

தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு, விக்ரம் நடித்திருக்கும் படம், வீர தீர சூரன் பாகம்2. தமிழ் திரையுலகில் முதலில் இரண்டாம் பாகம் வெளியாகி விட்டு, அதன் பிறகு பாகம் 1 வெளியாவது அரிதாகத்தான் நடக்கும். அந்த வகையில், புது முயற்சியாக வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருந்தது. இதற்காக, படக்குழுவினர் இசை வெளியீட்டு விழாவை நடத்தி பெரிய அளவில் ப்ரமாேஷன்களையும் செய்தனர். ஆனால், கடைசியில் ரிலீஸ் தேதியில் இந்த படத்திற்கு பிரச்சனை எழுந்துள்ளது.

என்ன பிரச்சனை?

வீர தீர சூரன் படத்தின் டிஜிட்டல் உரிமம் குறித்த பிரச்சனைதான் தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. இந்த வழக்கினை B4U மீடியா தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரனை, தொடங்குவதற்கு முன்னர் காலை 9 மணி காட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த படத்தை தயாரித்திருக்கும் ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று, படத்தின் அனைத்து ஆவணங்களையும் 40 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 

படத்திற்கு நிதி வழங்கியதால், பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு வெளியிட திட்டமிட்டதாகவும் Ivy entertainment என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

படம் எப்போதுதான் வெளியாகும்?

வீர தீர சூரன் திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிகள் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தின் எந்த தியேட்டர்களிலும் 9 மணி காட்சிக்கு படம் திரையிடப்படவில்லை. இப்போதும் படத்தின் ரிலீஸ் குறித்த விசாரணை நடைப்பெற்றது. இறுதியில், 4 வாரங்களுக்கு படத்தை வெளியிடக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விக்ரம் செய்த தியாகம்..

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான பல சமீபத்திய படங்கள் பெரும் தோல்வியை தழுவி வருகிறது. இவருக்கு வீர தீர சூரன் 2 திரைப்படம்தான் கம்-பேக் கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் தற்போது பிரச்சனை எழுந்துள்ளதால் அவரே முன்வந்து சில விஷயங்களை செய்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை டெப்பாசிட் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர். இதனால், தனது சம்பளத்தின் ஒரு தொகையை விக்ரம் முன்வந்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | வீர தீர சூரன் படம் வெளியாவதில் சிக்கல்.. வெளியான அதிர்ச்சி தகவல்

மேலும் படிக்க | வீர தீர சூரன் படம் எப்படி உள்ளது? வெளியானது முதல் விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News