OTT Releases This Week : கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துவிட்டது. இதையொட்டி தியேட்டர்களில் வெளியாகும் புது படங்களும் ரிலீஸ் இருக்கு சில நாட்களுக்கு பின்பு ஆன்லைனில் பல தளங்களில் வெளியாகி விடுகின்றன. அந்த வகையில், இந்த வாரமும் பல படங்கள் வெளிவர இருக்கின்றன. அவற்றின் லிஸ்டையும், எதை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
சாவா: பாலிவுட் வரலாற்று ஆக்ஷன் படம் சாவா மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாகும். இந்த படத்தில் விக்கி கவுஷல், ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர். இந்த படம் ரூ.780 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை.
Aale Raje aale Witness a tale of courage and glory etched in time
Watch Chhaava, out 11 April on Netflix. #ChhaavaOnNetflix pic.twitter.com/6BJIomdfzd
— Netflix India (@NetflixIndia) April 10, 2025
பெருசு: பெருசு படத்தை புதுமுக இயக்குநர் இளங்கோ ராம் என்பவர் இயக்கியிருக்கிறார். இதில் வைபவ், சுனில் ரெட்டி, சாந்தனா, விடிவி கணேஷ், தீபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஹாரிகா, வைபவ்வின் மனைவியாக இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கடந்த மார்ச் 14ஆம் தேதி, இப்படம் வெளியானது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஏப்ரல் 11 ஆம் தேதி ஸ்ட்ரீமிங்கிற்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீமிங்கிற்கு வரவிருக்கிறது.
ஸ்வீட் ஹார்ட்: நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் கடந்த மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். இப்படத்தின் மூலம் இயக்குநராக ஸ்வினீத் எஸ். சுகுமார் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையும் அமைத்துள்ளார். கதாநாயகியாக கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். மேலும், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உறவுகள் குறித்தும், ஒரு காதல் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாக இப்படத்தில் கூறப்பட்டிருந்தது. இப்படம் மக்கள் மத்தில் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில் இந்த படம் நாளை அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது.
சோரி 2: விஷால் புரியா இயக்கியுள்ள ஹாரர் த்ரில்லர் படமான சோரி 2, அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் ஏப்ரல் 11 ஆம் தேதி ஸ்ட்ரீமிங்கிற்கு வரவிருக்கிறது.
கோர்ட்: கோர்ட் படம் இந்த வாரம் ஏப்ரல் 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. பிரியதர்ஷி, ஹர்ஷ் ரோஹன், ஸ்ரீதேவி முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.57 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
கிங்ஸ்டன்: ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள கிங்ஸ்டன் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிறது. கிங்ஸ்டன் படம் மார்ச் 8 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் தயாரித்து இசையமைத்து உள்ளார்.
மேலும் படிக்க | குட் பேட் அக்லி: அஜித்தின் சட்டை விலை எவ்வளவு தெரியுமா? கேட்டால் வாய பொளப்பீங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









