Latest OTT Releases May Month 2025: கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துவிட்டது. இதையொட்டி தியேட்டர்களில் வெளியாகும் புது படங்களும் ரிலீஸ் இருக்கு சில நாட்களுக்கு பின்பு ஆன்லைனில் பல தளங்களில் வெளியாகி விடுகின்றன. அந்த வகையில், இந்த மாதமும் பல படங்கள் வெளிவர இருக்கின்றன. அவற்றின் லிஸ்டையும், எதை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
குட் பேட் அக்லி
பிரபல நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தை த்ரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மார்க் அண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, சுனில், யோகி பாபு, அர்ஜூன் தாஸ், பிரியா வாரியார், ராகுல் தேவ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசைமைத்து உள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் அஜித்குமாரின் ரசிகர்களை திருப்தி அடைய செய்தது. இந்நிலையில் இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி வருகிற மே 8ம் தேதி வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
கேங்கர்ஸ்: Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியிருந்த படம் கேங்கர்ஸ். இந்த படம் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் இம்மாதம் OTT-யில் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற மொழி படங்கள்:
மற்ற மொழிகளின் படங்களை பற்றி பேசுகையில், மே 7 ஆம் தேதி அன்று வெளியாகும் லாஸ்ட் புல்லட், அதேபோல் மே 15 ஆம் தேதி லவ் டெத் ரோபோட்ஸ் சீசன் 4 வெளியாகிறது, மே 22 அன்று சைரன்ஸ் வெளியாகிறது, மே 23 அன்று ஃபியர் ஸ்ட்ரீட் ப்ராம் க்வீன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தர் மே 30 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகயுள்ளது. இதுதவிர மோகன்லால் நடித்த துடரும் என்கிற மலையாள படமும் இந்த மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Retro Movie Review | சூர்யாவின் ரெட்ரோ படம் எப்படி இருக்கு? இதோ திரை விமர்சனம்!
மேலும் படிக்க | சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









