Jailer 2 Update: ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு? சூப்பர்ஸ்டார் கொடுத்த தரமான அப்டேட்

Rajinikanth Jailer 2: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படம் குறித்த அப்டேட் ஒன்றை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இதன் விவரத்தை இங்கே காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2025, 08:02 PM IST
  • ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்.
  • ஜெயிலர் 2 படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.
Jailer 2 Update: ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு? சூப்பர்ஸ்டார் கொடுத்த தரமான அப்டேட்

Rajinikanth Jailer 2: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படம் குறித்த அப்டேட் ஒன்றை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இதன் விவரத்தை இங்கே காணலாம்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு:
ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஷூட்டிங் தொடங்குவதாக ஜெயிலர் 2 (Jailer 2) படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ பதிவு ஒன்றை முன்னதாக வெளியிட்டு இருந்தார்.

ஜெயிலர் 2 அப்டேட்:
ஜெயிலர் 1 படத்திற்கு இசையமைத்த அதே அனிருத்தான், ஜெயிலர் 2 படத்திற்கும் இசையமைத்துள்ளார். நெல்சன் உள்பட இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அதே குழுவினராகத்தான் இந்த படத்திலும் தொடர உள்ளனர். ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், மருமகளாக நடித்திருந்த மிர்னா மோகன் ஆகியோர் அதே கதாப்பாத்திரங்களில் தொடர உள்ளனர். மோகன் லால், சிவராஜ் குமார் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புது வில்லன்கள் இதில் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று கோவை சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போது ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) பகிர்ந்துள்ளார். அதாவது, 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக தான் கோவை வந்துள்ளதாகவும், படத்தின் வெளியீடு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

மெகா ஹிட் அடித்த ஜெயிலர் முதல் பாகம்:
முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்போது நிறைவு?
இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளராகளை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்படி போய்க்கொண்டு என்றும் படம் எப்போது நிறைவு பெரும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "ஜெயிலர் 2 படப்பிடிப்பு நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவு பெற டிசம்பர் மாதம் ஆகலாம்" என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

ஜெயிலர் 2க்கு பிறகு ரெஸ்ட்டில் ரஜினி:
இதனிடையே ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் 3 மாதங்களுக்கு படங்களில் இருந்து பிரேக் எடுக்க போவதாகவும், அந்த நேரத்தில் தனது சுய சரிதையை எழுத இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி ரஜினி, தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பிறகு தான் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பார் என்றும் திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பிரபல நடிகருடன் உறவில் ஆர்த்தி ரவி? உண்மை வெளிவருவது எப்போது? பிரபலம் சொன்ன தகவல்!

மேலும் படிக்க | நன்றாக வளர்ந்து விட்ட ஜெயம் ரவியின் 2 மகன்கள்! ஆர்த்தி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News