LIK Movie X Review : விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம், Love Insurance Kompany. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனங்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

LIK Movie X Review : விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஓராண்டிற்கு முன்பே வெளியாக இருந்த படம், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தை LIK என்று அனைவரும் சுருக்கமாக அழைக்கின்றனர். இந்த படம், ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
LIK திரைப்படம்:
கடைசியாக, காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கிய அவர், அடுத்ததாக இயக்கியது லவ் இன்சூரன்ஸ் கம்பெனியைதான். கிட்டத்தட்டன் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ப்ரொடக்ஷனில் இருந்த இந்த திரைப்படம், நீண்ட நிதி போராட்டத்திற்கு பிறகு இப்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். இதில், பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக சீமான் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி இருப்பதை தொடர்ந்து இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாம்!
LIK படம் குறித்து விமர்சனம் கொடுத்துள்ள ஒரு ரசிகர், இந்த படத்திற்கு நல்ல Rom-Com செட்-அப் இருப்பதாகவும், படத்தில் இசை, ஒளிப்பதிவு அனைத்தும் நன்றாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். கூடவே, இரண்டாம் பாதி போர் அடிப்பதாகவும், காமெடி கொஞ்சம் வர்க் அவுட் ஆவதாகவும் தெரிவித்திருக்கிறார். கிரித்தி ஷெட்டி படத்தில் அழகாக இருப்பதாகவும், படத்தின் நீலத்தை கொஞ்சம் குறைத்திருந்தால், படம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
76. #LIK as an idea feels good for a rom-com with a futuristic setup, backed by good music & beautiful visuals, but it quickly gets boring, especially in the 2nd half, which feels never-ending. Filler comedy with Yogibabu & social media scenes make it even more boring.
— Surya (@suryaatmovies) April 10, 2026
1/2 pic.twitter.com/yC4AM089xF
கண்டிபா பார்க்கணும்..
LIK படத்தில் பிரதீப் ரங்கநாதனை ஸ்கிரினில் பார்ப்பதற்கு மேஜிக் போல இருப்பதாகவும், அவரது எனர்ஜி மற்றும் பர்ஃபாமென்ஸ் டாப் நாட்ச் ஆக இருப்பதாகவும் ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். அனிருத்தின் இசை மற்றும் பாடல்கள் நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை கொடுப்பதாக அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
#PradeepRanganathan is pure magic on screen His energy and performance are top-notch. #Anirudh’s music and BGM are a massive boost, making it a complete theater entertainer. Must watch #Lik pic.twitter.com/21plk6uSCq
— (@Ameeeeraliii) April 10, 2026
Gen-Z தலைமுறையினரை ஈர்க்கும் படம்..
”Gen Z தலைமுறை பார்வையாளர்களைக் குறிவைத்த ஒரு எதிர்காலப் படம். பி.ஆர், எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மற்றும் அனிருத்தின் இசை ஆகியவை இப்படத்தின் முக்கிய சிறப்பம்சங்கள். ஒவ்வொரு காட்சியிலும் விஷுவல்கள் பிரம்மாண்டமாகவும் ஸ்டைலாகவும் இருக்கின்றன. சீமானின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. 'தீமா தீமா' மற்றும் 'எனக்கேன யாரு இல்லையே' பாடல்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை வழங்குகிறார். அந்த உலகத்துடன் உங்களால் ஒன்றிப்போக முடிந்தால், இப்படம் நிச்சயம் உங்களை திருப்திப்படுத்தும்... உங்களுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது இறுதியில் உங்கள் ரசனையைப் பொறுத்தது. ஒட்டுமொத்தமாக, தமிழ் சினிமாவில் இது ஒரு தனித்துவமான முயற்சி மற்றும் பார்க்கத் தகுந்த ஒரு படம் (3.25/5)” என்று ஒரு ரசிகர் இது குறித்து விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.
#LIK – A Futuristic Film Targeting The Gen Z Audience. PR, SJ Suryah’s Performance & Anirudh’s Music Are The Major Highlights Of The Film. Visuals Look Grand And Stylish In Every Scene & Seeman’s Portion Works Well Dheema Dheema & Enakena Yaarum Illaiye Songs Director Vignesh…
— Trendswood (@Trendswoodcom) April 10, 2026
சிம்பிளான லவ் ஸ்டோரி!
“LIK ஒரு புதிய கருத்துடன் கூடிய ஒரு தனித்துவமான காதல் கதை பிரதீப் மிகச் சிறப்பாக நடித்து, படத்தை நன்றாகத் தாங்கிச் செல்கிறார். கிருத்தி ஷெட்டி அழகாக இருக்கிறார், துணை நடிகர்களும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர். அனிருத்தின் இசை பல காட்சிகளை மேலும் சிறப்பாக்குகிறது” என்று ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
#LIK is a unique love story with a new concept
— Steven antony (@antony_s369) April 10, 2026
Pradeep acts very well and carries the film well
Krithi Shetty looks great, and supporting actors do a good job
Anirudh’s music makes many scenes better #PradeepRanganathan pic.twitter.com/Tkia5NNqcB
படத்தின் உண்மையான பாதுகாவலர்..
LIK படத்தை பார்த்த ஒரு ரசிகர், படத்திற்கு 3.5 ரேட்டிங் கொடுத்திருக்கிறார். “காதல் என்பது இரண்டு மனங்களின் உணர்வு அதை எந்தச் செயலியோ, எந்த இயந்திரமோ தீர்மானிக்க முடியாது என்பதைக் கச்சிதமாக பதிவு செய்யும் படம்” என்று தனது பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி சூப்பராக இருப்பதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
#Lik - Good watch (3.5 /5)
— KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) April 10, 2026
காதல் என்பது இரண்டு மனங்களின் உணர்வு அதை எந்தச் செயலியோ, எந்த இயந்திரமோ தீர்மானிக்க முடியாது என்பதைக் கச்சிதமாக பதிவு செய்யும் படம்.
முதல் பாதி சுமாராக இருந்தாலும், இரண்டாம் பாதி சூப்பர்.
இந்த படத்தின் உண்மையான பாதுகாவலர்கள் #Sisuriya… https://t.co/mjy0V0dOLb pic.twitter.com/d3o2jOXwqK
இந்த படத்தின் பாதுகாவலர்களாக S.J.சூர்யா மறும் அனிருத் இருப்பதாகவும், இவர்களின் வேலைபாடு படத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக கூறியிருக்கிறார். க்ளைமேக்ஸ் நன்றாக இருப்பதாகவும், இது பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரூ.100 கோடி வசூல் செய்யப்போகும் படம் என்றும் கூறியிருக்கிறார். மொத்தத்தில், குடும்ப பார்வையாளர்களுக்கு இந்த படம் சற்று சலிப்பை கொடுக்கலாம் என்றும், நண்பர்களோடு ஜாலியாக போய் பார்க்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ