List Of Ajith Kumar Movies Released In April : ஏப்ரல் 10ஆம் தேதி, குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம், விடாமுயற்சி படத்திற்கு அடுத்து வெளியாக இருக்கிறது. அப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சறுக்கிய நிலையில், GBUதான் சரிந்து கிடக்கும் அஜித்தின் மார்கெட்டை தூக்கி விட வேண்டும் என்ற ஆசையும் ரசிகர்கள் மனங்களுக்குள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், இதுவரை ஏப்ரல் மாதத்தில் வெளியாகி அஜித்தின் படங்கள் எதெல்லாம் ஹிட் கொடுத்து, எதெல்லாம் ஹிட் கொடுக்கவில்லை என்பதை இங்கு பார்ப்போம்.
என் வீடு என் கணவர்:
அஜித்குமார் நடித்திருந்த முதல் தமிழ் படம், என் வீடு என் கணவர். இந்த படத்தில் அவர் ஒரு துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக சுரேஷ் நடித்திருப்பார். நாயகியாக நதியாவும் பிற கதாப்பாத்திரங்களில் மனோரமா, மாதுரி, செந்தில் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படம், இந்த கால இளசுகள் மத்தியில் கிளாசிக் படமாக தோன்றினாலும், வெளியான சமயத்தில் தோல்வி அடைந்தது.
ராசி:
அஜித் நடிப்பில் 1997ல் வெளியான படம் ராசி. காதல் படமான இதனை, முரளி அப்பாஸ் என்பவர் இயக்கியிருந்தார். இரு துருவங்களாக இருக்கும் இரு குடும்பங்களின் வாரிசுகளும் காதலில் விழுவதுதான் கதை. இதில், அஜித்துக்கு ஜோடியாக ரம்பா நடித்திருப்பார். இந்த படமும், அப்போதைய ரசிரக்களுக்கு பிடிக்காததால் தியேட்டர்களில் சரியாக ஓடாமல் தோல்வியடைந்தது.
வாலி:
அஜித்தின் படங்களில், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது ரசிகர்கள் மனதில் இருந்து மறையாமல் இருக்கும் படம், வாலி. இந்த படத்தில் அஜித் ஹீராே-வில்லன் என அண்ணன் தம்பி ரோலில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த இந்த படத்தல் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். ஹீரோ வளவளவென பேசும் குணாதிசயம் படைத்தவராக இருக்க, வில்லன் வாய் பேச முடியாத விஷமம் மிக்க குணதாசியமாக இருப்பார். இரண்டையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் நடித்து காெடுத்திருப்பார், அஜித். இந்த படம், 1999 ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகி பெரிய ஹிட் அடித்தது.
திருப்பதி:
பேரரசு இயக்கத்தில் 2006ஆம் ஆண்டில் வெளியான படம், திருப்பதி. இதில் அஜித் வித்தியாசமாக நீண்ட முடியுடனும், நெற்றியில் எப்போதும் சந்தனத்துடனும் வருவார். இதில் அவருக்கு ஜோடியாக சதா நடித்திருப்பார். அஜித்துடன் முக்கிய கதாப்பாத்திரங்களில் அருண் பாண்டியன், ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம், அஜித்தின் வாழ்க்கையில் பெரும் தோல்வியை கொடுத்த படமாக அமைந்தது.
19 வருடங்கள் கழித்து ஏப்ரல் மாத ரிலீஸ்:
தற்போது வெளியாக இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம், ஏப்ரல் 10ல் வெளியாகிறது. இந்த படம், அஜித்திற்கு 19 வருடங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறது. இதுவரை, இந்த மாதத்தில் வெளியான அஜித்தின் படங்கள், அதிகமாக தோல்வியையே தழுவி இருக்கின்றன. இந்த வரலாற்றை குட் பேட் அக்லி படம் மாற்றுமா இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | குட் பேட் அக்லி: அஜித்தின் சட்டை விலை எவ்வளவு தெரியுமா? கேட்டால் வாய பொளப்பீங்க..
மேலும் படிக்க | அஜித்திற்கு தோல்வியை தேடித்தந்த பிப்ரவரி ரிலீஸ் படங்கள்! விடாமுயற்சி அவ்ளோ தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









