)
Rajinikanth A Films Before Coolie : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிரக்கும் கூலி திரைப்படத்திற்கு எட்டுத்திக்கில் இருந்தும், எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், அப்படம் ஏ சான்றிதழ் வாங்கியதும், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அவரது எந்த படங்கள் இதற்கு முன்னர் ஏ சான்றிதழ் வாங்கியது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
கூலி படம் ‘ஏ’ சான்றிதழ்:
ரஜினிகாந்த், பல ஆண்டுகளாக கமர்ஷியல் படங்களில் மட்டும்தான் நடித்து வருகிறார். இவரது படங்கள் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய வகையில்தான் இருக்கும். எனவே பெரும்பாலும் அவற்றிற்கு U/A சான்றிதழ்கள்தான் வழங்கப்படும். அதாவது, 18 மற்றும் அதற்கு கீழ் வயதுடையவர்கள் பார்க்கும் வகையிலான படம். ஆனால், கூலி படம் அதற்கு சற்று மாறுபட்டு இருக்கிறது. இப்படத்தை 18+ வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையில் A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இது, ரசிகர்களை கொஞ்சம் ஷாக் ஆக்கியிருக்கிறது.
ரஜினி நடிப்பில் வெளியான ஏ படங்கள்:
ரஜினி, 70களில் மற்றும் 80களில் நடித்த சில படங்கள் மட்டும்தான். அந்த படங்கள் எதுவுமே இதுவரை ஹிட் ஆனதில்லை என்று கூறப்படுகிறது.
ரங்கா:
1982ல் வெளியான படம், ரங்கா. இந்த படத்தை ஆர்.தியாகராஜன் இயக்கியிருக்கிறார். இது, ரஜினிகாந்தின் 75வது படமாகும். இதில் கே.ஆர்.விஜயா, சில்க் ஸ்மிதா, தேங்காய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இந்த படம், கமர்ஷியலாக ஹிட் ஆனது.
காளி திரைப்படம்:
1980ல் வெளியான படம், காளி. இந்த படத்தை வி.சசி இயக்கியிருந்தார். இதில் ஃபடாஃபட் ஜெயலக்ஷ்மி, ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் சறுக்கியது.
சிவா:
1989ல் வெளியான படம், சிவா. இந்த படத்தில் சோபனா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனை அமீர்ஜான் இயக்கியிருந்தார். வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். இந்த படம், பாக்ஸ் ஆஃபிஸில் சறுக்கியதால் தோல்வியடைந்ததாக கருதப்பட்டது.
தப்பு தாளங்கள்:
தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படங்களுள் ஒன்று, தப்பு தாளங்கள். கே.பாலச்சந்தர் இயக்கியிருந்த இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சரிதா நடித்திருந்தார். கமல்ஹாசன், சுந்தர் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்த காலத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றது. ஓரளவிற்கு வசூலையும் பெற்றதாக கூறப்படுகிறது.
வரலாறு மாறுமா?
ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஏ சான்றிதழ் பெற்ற படங்கள், ஒரு சில மட்டும் ஓரளவிற்கு ஹிட் ஆனாலும், இப்போது போல அதிரி புதிரி ஹிட் ஆகவில்லை. அதே சமயத்தில் அந்த காலத்தில் ரஜினிக்கு இருந்த மார்கெட் வேறு, இப்போது இருக்கும் மார்கெட் வேறு. இப்போது, அவர் கண்டிப்பாக ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற அழுத்தம் இருக்கிறது. அது மட்டுமன்றி, கூலி படம் தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி அடிக்கப்போகும் முதல் தமிழ் படம் என்றும் கூறப்படுகிறது. எனவே, இதுவரை ரஜினியின் ‘ஏ’ படங்கள் செய்ததை மாற்றி, இந்த படம் புது வரலாறு படைக்குமா என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ