தன்னைவிட வயது குறைவான இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகைகளின் பட்டியல்

தமிழ் சினிமாவில் பொதுவாக, மூத்த நடிகர்கள் இளைய நடிகைகளுடன் ஜோடி சேர்வதுதான் வழக்கம். ஆனால், விதிவிலக்காக சில முன்னணி நடிகைகள், தங்களை விட வயது குறைந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 9, 2025, 10:59 AM IST
  • டாப் காதாநாயகிகளில் மிகவும் மூத்தவர் என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான்
  • இளைய நடிகரான தேவ் மோகனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
  • இவர்களுக்கு மொத்தம் 8 வயது வித்தியம்.
தன்னைவிட வயது குறைவான இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகைகளின் பட்டியல்

சினிமாவில் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்கள் 60 வயது ஆனாலும், 20 வயது ஹீரோயினுடன் ஜோடி போட்டு நடனம் ஆடலாம். காதல் செய்யலாம். தை மக்களும் ஏற்றுக்கொள்வார்கள், ஆனால், தன்னை விட வயது குறைந்த ஹீரோக்களுடன் எந்த ஒரு ஹீரோயினும் நடிக்க முன்வர மாட்டார்கள் அப்படி நடித்த ஹீரோயின்கள் யார் என்பதை இப்போது பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தமிழ் சினிமாவில் பொதுவாக, மூத்த நடிகர்கள் இளைய நடிகைகளுடன் ஜோடி சேர்வதுதான் வழக்கம். ஆனால், விதிவிலக்காக சில முன்னணி நடிகைகள், தங்களை விட வயது குறைந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். அந்த நடிகைகள் யார் என்பதை இப்போது இங்கே பார்ப்போம்.

சினேகா: புன்னகை அரசி என்று போற்றப்படும் நடிகை சினேகா தன்னைவிட 3 வயது குறைந்த தனுஷ் உடன் இணைந்து புதுப்பேட்டை, பட்டாசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதேபோல் தன்னை விட 3வயது இளையவரான சிம்புவுடனும் சிலம்பாட்டம் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். 

ஜோதிகா: ஜோதிகா திருமணத்திற்கு முன் வரை செம்ம உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவராவார், இவர் ரஜினி முதல் சிம்பு வரை அனைத்து ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார், இதில் சிம்பு இவரை விட வயது குறைந்தவர்கள் என்றாலும் மன்மதன், சரவணா என்று இரண்டு படங்களின் ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல் இவர் நடிகர் பிரித்விராஜூடன் மொழி படத்தில் நடித்துள்ளார். 

நயன்தாரா: நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆவார், இவர் தன்னை விட ஒரு வயது குறைந்த சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்தில் நடித்தார். அதேபோல் தற்போது நடிகை நயனதாரா தன்னை விட 5 வயது குறைவாக இருக்கும் நடிகர் கவினுடன் 'Hi' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராய்: டாப் காதாநாயகிகளில் மிகவும் மூத்தவர் என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான் , இவர் தன்னை விட வயது குறைந்த அபிஷேக் பச்சனை தான் திருமணமே செய்துள்ளார், அதுமட்டுமின்றி சமீபத்தில் இவர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார், இவருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் சுமார் 8 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

காத்ரீனா கைப்: காத்ரீனா கைப் பாலிவுட் சினிமாவின் அனைத்து கான் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர் வளர்ந்து வரும் நடிகர் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார், இவர் காத்ரீனாவை விட 2 வயது குறைந்தவர்.

சமந்தா: நடிகை சமந்தா தெலுங்கில் ஒரு படத்தில் தன்னை விட இளைய நடிகரான தேவ் மோகனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

கல்யாணி ப்ரியதர்ஷன்: சமீபத்தில் வெளியான லோகா சாப்டர் 1: சந்திரா படத்தில் நடித்தவர் கல்யாணி ப்ரியதர்ஷன். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் படத்தில் நஸ்லன் நடித்திருந்தார். இவர்களுக்கு மொத்தம் 8 வயது வித்தியம் என்றாலும் இவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்தது என்று தான் கூற வேண்டும்.

திரைப்படங்களில் நடிகரின் வயதுக்கும், நடிகையின் வயதுக்கும் இடையே உள்ள வேறுபாடு, கதைக்களம் மற்றும் பாத்திரத்தின் தேவையைப் பொறுத்து மாறலாம். சில நேரங்களில், மூத்த நடிகைகள், தங்களை விட வயதில் சிறிய நடிகர்களுக்கு இணையாக கதாநாயகியாகவும், அல்லது தாயாகவும் நடித்த நிகழ்வுகளும் உள்ளன என்பது குறிப்படத்தக்கது.

மேலும் படிக்க | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ஆட்டோகிராப்! ஆனால் இந்த காட்சிகள் இருக்காது - சேரன்!

மேலும் படிக்க | ‘தளபதி கச்சேரி’ ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்! ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News