)
Celebrities Turned Against Vijay Karur Stampede : நடிகராக மட்டுமன்று, தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சியையும் தொடங்கி இருப்பவர் விஜய். இவர், தனது கட்சியை தொடங்கிய பின்பு, இரண்டு மாநாடுகளை நடத்தி முடித்து விட்டார். அதற்கடுத்து, சில வாரங்களுக்கு முன்பிருந்து தேர்தல் பரப்புரையை ஆரம்பித்தார்.
கரூர் சம்பவம்:
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பரப்புரையில் விஜயை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர். இன்னொரு புறம், தவெக-வினரின் அலட்சியம்தான் இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று திமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் ஆய்வு நடத்தி, விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, கரூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். தவெக தலைவர் விஜயோ, தவெக நிர்வாகிகளோ இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை.
இதனுடையதால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போது லைட்டுகள் ஆப் ஆனதாகவும் போலீசார் தடியடி நடத்தியதாகவும் இதற்கு பின்னால் சதி இருப்பதாகவும் த வெ காவினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த விசாரணை ஒரு புறம் சென்று கொண்டிருக்க, சில பிரபலங்கள் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளனர்.
சத்யராஜ்:
கரூர் சம்பவம் நடந்த போது, சத்யராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டார். அப்போது, “தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது” என்ற பாடலை நினைவு கூர்ந்த அவர், கடைசியில் “ச்சே..” என்று வீடியோவை முடித்து விட்டார். இவர் விஜய்யை நேரடியாக சொல்லவில்லை என்றாலும், உரிய நபர் யாரோ அவர் மீது கடுங்கோபம் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதைத்தாண்டி இப்போது வரை, இவர் விஜய் மீது கோபப்பட்டுதான் இந்த வீடியோவை வெளியிட்டதாக சிலர் கூறி வருகின்றனர்.
ஓவியா:
பிரபல தமிழ் நடிகை ஓவியா, கரூர் விஷயத்தில் சில பதிவுகளை ஆரம்பத்திலேயே வெளியிட்டார். “விஜய்யை கைது செய்ய வேண்டும்” என்று இவர் வெளியிட்டிருந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், இதனை போட்ட சில மணி நேரத்திலேயே அவர் டெலிட் செய்தார். அப்போதும் விடாமல் விஜய் ரசிகர்களும் தவெக-வினரும் ஓவியாவை பயங்கரமாக திட்டி வந்தனர்.
ஜேம்ஸ் வசந்தன்:
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சமீபத்தில் ஒரு பதிவை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதில், இத்தனை உயிர்கள் பறிபோய் இருக்கும் போது எப்படி சில தவெக-வினர் கூச்சமே இல்லாமல் “We Stand With Vijay” என்கிற வாசகத்தை எடுத்துக்கொண்டு வருகின்றனர் என்பது தெரியவில்லை என்று கூறியிருந்தார். தொடர்ந்து கரூர் சம்பவம் குறித்து பலர் கொடுக்கும் நேர்காணல்களையும் தனது பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
எஸ்.வி.சேகர்:
விஜய் குறித்து பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “மன்னிப்பு கேட்கிறவர்தான் பெரிய மனுஷன். 25 லட்சம் தரேன், உங்களால இறந்து போன 10 வயது குழந்தையை திரும்ப தர முடியுமா?” என்று கேட்டார்.
அசீம்:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் டைட்டில் வின்னர் ஆனவர் அசீம். இவர், சீரியில் நடிகராகவும் இருந்துள்ளார். இவர், சமீபத்தில் தனது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், திமுக ஆட்சி குறித்து புகழ்ந்து பேசிய அவர், விஜய் மக்களுக்காக நிற்பவர் இல்லை என்றும், களத்தில் நின்றது திமுக என்றும் கூறினார். மேலும், சமூக நீதி பேசும் எந்த இயக்குநர்கள் அல்லது பிரபலங்களும் கரூர் சம்பவம் குறித்து இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறினார். ஆனால், பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ