List Of Hit Tamil Films In 2025 : இந்த 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, பல திரைப்படங்கள் வெளியாகி விட்டது. கடந்த ஆண்டில் பெரிய படங்கள் அனைத்தும், வருடத்தின் பிற்பாதியில்தான் வெளியானது. ஆனால், அந்த கதை இந்த ஆண்டில் தொடரவில்லை. பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் ஆரம்பத்திலேயே வெளியாக ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில், இதுவரை 3 மாதங்களில் 72 திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அவற்றில், 5 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
1.மதகஜராஜா:
விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு உருவான படம், மதகஜராஜா. இந்த படத்தை, சுந்தர்.சி இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் விஷாலுடன் சேர்ந்து சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.
பொதுவாக, ஒரு படம் தாமதமாக வெளியாகிறது என்றாலே, அது பெரிதும் ஹிட் ஆகாது என்பது ரசிகர்களின் எண்ணம். ஆனால், மத கஜ ராஜா திரைப்படத்தை பொறுத்தவரை, அந்த எண்ணங்கள் அனைத்தும் தவிடு பொடியாகி போனது. காரணம், இந்த படம் ஹிட் ஆனதோடு மட்டுமன்றி மொத்தம் ரூ.50 கோடியை கலெக்ட் செய்தது.
2.டிராகன்:
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டிராகன். இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இதில், பிரதீப்பிற்கு ஜோடியாக கயாடு லோஹர், அனுபமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வாழ்வில், தப்புக்கு மேல் தப்பு செய்த இளைஞன், தன்னால் சுற்றி இருப்பவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனர் என்பதை பார்த்தவுடன் திருந்துவதுதான் படத்தின் கதை. இந்த படம், உலகளவில் சுமார் ரூ.150 கோடி வரை கலெக்ட் செய்தது.
3.குடும்பஸ்தன்:
திறமைமிகு நடிகர் மணிகண்டனின் தொன்மையான படங்களுள் ஒன்று, குடும்பஸ்தன். ஒரு நடுத்தர இளைஞனின் கடன்பட்ட வாழ்க்கையை நகைச்சுவையாக கூறும் வகையில் எடுக்கப்பட்ட படம் இது.
மிக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நல்ல விமர்சனங்களை பெற்றதோடு சுமார் ரூ.27 கோடி வரை வசூலித்து இருந்தது. ஓடிடியில் வெளியான பிறகும், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
4.வீர தீர சூரன்:
விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், வீர தீர சூரன் பாகம் 2. ஹை ஆக்டேன் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த படத்தை அருண் குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில், விக்ரம் எப்போதும் போல அல்லாமல், ஜன ரஞ்சகமான குடும்பஸ்தனாகவும் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
வீர தீர சூரன் திரைப்படம் வெளியாவதிலேயே பல சிக்கல்கள் ஏற்பட்டது. ஓடிடி உரிமை கொடுக்காமல், படம் திரையிடப்படுவதாக சிலர் வழக்கு தொடர்ந்ததன் பேரில், இப்படத்தின் முதல் 2 காட்சிகள் வெளியிட தடை ஏற்பட்டது. இறுதியில் பிரச்சனைகள் முடிந்து மாலை காட்சிதான் வெளியானது. இருப்பினும், படத்திற்கு ஓரளவிற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததுடன், வசூலும் ஒரளவிற்கு சூடு பிடித்துள்ளது. இந்த படம், ஹிட்டா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வந்துவிடும். ஆனால் இப்போது வரை ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
5.சப்தம்:
ஈரம் திரைப்படத்தின் இயக்குநர் அரிவழகன் வெங்கடாச்சலம் இயக்கியிருந்த படம், சப்தம். இந்த படத்திலும் ஆதி ஹீரோவாக நடித்திருந்தார். ஹாரர்/த்ரில்லர் வடிவில் உருவான இந்த படம், தமிழகத்தில் வெளியாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது. ஆனாலும், படம் பார்த்த சிலர் இதற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்திருந்தனர். வசூல் ரீதியாக ஹிட் அடிக்கவில்லை என்றாலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?
பெரிய ஹைப் கொடுப்பதால் மட்டும் படங்கள் ஓடி விடும் என்று படக்குழுவினர் நினைப்பது வாடிக்கையாகி வருகிறது. விடாமுயற்சி, கிங்க்ஸ்டன், வணங்கான், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்கள், இதனாலேயே ரசிகர்களை ஏமாற்றியது. அது மட்டுமன்றி, நல்ல திரைக்கதையும், படத்திற்கு முக்கியம் எனும் உண்மை, இப்போது சில இயக்குநர்கள் இடையே மழுங்கி வருகிறது. இதனால், நேரத்தியான படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள், திரைக்கதையில் தரம் குறைந்த படங்களை பார்க்கும் போது, வெறுப்படைகின்றனர். இதுவும், 72 படங்களில் 5 மட்டுமே ஹிட் ஆனதற்கு ஒரு காரணம் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | 2025ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 13 படங்கள்!! ‘இந்த’ 1 படத்திற்கு மவுசு அதிகம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









