List Of Tamil Actors Who Dropped Their Special Title : தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்களுக்கு, ரசிகர்கள் உள்ளது பிற திரை பிரபலங்கள் சேர்ந்து ஏதேனும் பட்டம் வழங்குவது வழக்கம். அதனை அனைவரும் இன் முகத்துடன் ஏற்றுக்கொள்வர். ஆனால் சமீப சில காலங்களாக திரைப்படங்கள் தங்களுக்கு வழங்கப்படும் பட்டங்களை வேண்டாம் என கூறுகின்றனர். அப்படி தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் டைட்டில்களை வேண்டாம் என கூறிய பிரபலங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என சொன்ன நயன்..
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர் நடிகை நயன்தாரா. வயதானாலும் சிலர் பீல்ட் அவுட் ஆகும் நிலையில், 40 வயதான பின்பும் எந்த படத்தை எடுத்தாலும் அதில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாக தமிழ் திரையுலகில் ஸ்டார் நடிகையாக விளங்கி வரும் இவர், ஷாருக்கான் உடன் ஜவான் படத்தில் இணைந்து நடித்த பாலிவுட்டிற்கும் சென்றார்.
நயன்தாராவிற்கு நானும் ரவுடிதான் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் டைட்டில் கார்டில் வழங்கப்பட்டது. அதிலிருந்து இவரை யார் அழைத்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்ட இவர், தன்னை இனி யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட வேண்டாம் என்று கூறிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் குமார்:
இப்படி தனக்கு கொடுக்கப்பட்டதை வேண்டாம் எனக் கூறிய நடிகர்களுள் ஒருவர் அஜித் குமார். இவருக்கு வழங்கப்பட்ட பட்டம், ‘தல’. தல-தளபதியை வைத்து தமிழ் சினிமாவில் பல காமெடிகளும் வெளிவந்துள்ளன. அஜித் நடித்த பல படங்களிலும் கூட அவரது பெயருக்கு முன்னர் ‘தல’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி யாரும் தன்னை அழைக்க வேண்டாம் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட அவரது ரசிகர்கள் அப்படி அழைப்பதே நிறுத்தினர். அதன் பிறகு பிரபலமான டிரெண்ட்தான், ‘கடவுளே அஜித்தே’. இது சில மாதங்கள் ட்ரெண்டானதை தொடர்ந்து, விடாமுயற்சி படத்தின் ரிலீஸிற்கு சில நாட்களுக்கு முன்னர் யாரும் தன்னை அப்படி அழைக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்ட அஜித், “ஒன்று என் பெயரை சொல்லி அழையுங்கள் இல்லையென்றால் AK என்று கூப்பிடுங்கள்” என்று அறிவுறுத்தி இருந்தார்.
கமல்ஹாசன்:
சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் வலம் வர நினைத்தவர் கமல்ஹாசன். இவருக்கு தசாவதாரம் படத்தில் ‘உலக நாயகன்’ பட்டத்தை வழங்கினார் அதன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அதன் பிறகு அவர் நடித்து வந்த அனைத்து படங்களிலும் அதே டைட்டில் கார்டு அவரது பெயருக்கு முன்னால் போடப்பட்டது. இவரும் சில மாதங்களுக்கு முன்பு திடீரென யாரும் தன்னை உலகநாயகன் என அழைக்க வேண்டாம் எனக் கூறிவிட்டார். ஆனால் நடிப்பில் அனைத்து திறன்களையும் கற்கும்/கற்பிக்கும் இவருக்கு இந்த பட்டம் வழங்குவது சிறந்தது தான் என்பது இவரது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
ரவி மோகன்:
நடிகர் ரவி மோகனின் முதல் படம், ‘ஜெயம்’. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து இவரை இப்போது வரை அனைவரும் ‘ஜெயம் ரவி’ என்று அழைத்து வந்தனர். ஆனால், இவரும் சமீபத்தில தன்னை அப்படி அழைக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்ததுடன் ரவி மோகன் என தனது பெயரிட்டு அழைக்குமாறு கூறினார்.
மேலும் படிக்க | நயன்தாரா மட்டுமில்லை! லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட 4 இந்திய நடிகைகள்..
மேலும் படிக்க | “கடவுளே அஜித்தே..” உருவானது எப்படி? எல்லாத்துக்கும் ‘இந்த’ வீடியோ தான் காரணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









