மனோஜ் பாரதிராஜாவுக்கு இரங்கல் தெரிவிக்காத டாப் நடிகர்கள்! அவ்ளோ பிசியா? யாரெல்லாம் தெரியுமா?

Actors Who Did Not Condolence Manoj Bharathiraja Death : தமிழ் திரையுலகின் நடிகராக விளங்கிய மனோஜ் பாரதிராஜா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்கு பெரிய பிரபலங்கள் சிலர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்களுக்கு இடையே எழுந்துள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 30, 2025, 12:22 PM IST
  • திடீரென இறந்த மனோஜ் பாரதிராஜா!
  • இரங்கல் தெரிவிக்காத பிரபலங்கள்..
  • யாரெல்லாம் தெரியுமா?
மனோஜ் பாரதிராஜாவுக்கு இரங்கல் தெரிவிக்காத டாப் நடிகர்கள்! அவ்ளோ பிசியா? யாரெல்லாம் தெரியுமா?

Actors Who Did Not Condolence Manoj Bharathiraja Death : சமீபத்தில் நேர்ந்த மனோஜ் பாரதியின் உயிரிழப்பு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 48 வயதான நிலையில், மனோஜ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பாரதிராஜாவின் மகனான இவர், சில படங்களில் ஹீரோவாக நடித்த போதிலும் பெரிதும் கவனிக்கப்படாத ஹீரோவாக இருந்தார். 

Add Zee News as a Preferred Source

மனோஜ் பாரதிராஜாவின் இறப்பு:

1999 ஆம் ஆண்டில் வெளியான தாஜ்மஹால் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் மனோஜ். இந்தப் படத்தை அவரது தந்தையும் இயக்குனருமான பாரதிராஜாவே இயக்கியிருந்தார். இந்த படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்றாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதையடுத்து, சமுத்திரம், கடல் பூக்கல், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் உள்ளிட்ட சில படங்களில் கவனிக்கத்தக்க ரோல்களில் நடித்திருந்தார்.

கடைசியாக விருமன் திரைப்படத்தில் நடித்திருந்த இவர், அதன் பிறகு திரையுலகில் பெரிதாக ஆக்டிவாக இல்லை. சில நாட்களுக்கு முன்பு, இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் திடீரென மீண்டும் உடல்நிலை சரியல்லாமல் போயுள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி இரவு, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த திடீர் மரணம், அவரது குடும்பத்தினரை மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் உலுக்கியது.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி..

எந்த ஒரு முக்கிய நடிகரும் அல்லது திரை பிரபலத்தின் வீட்டில் உள்ளவர் இறந்தாலும் ஒரு சில நடிகர்கள் அதில் தவறாமல் கலந்து கொள்வர். அதிலும், இயக்குநர் பாரதிராஜா, தமிழ்நாட்டின் சிறந்த இயக்குநர்களுள் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவருக்கு நண்பராக இருந்த தமிழ் நடிகர்கள், மனோஜ்ஜின் நண்பர்கள்,  மனோஜ் உடன் சேர்ந்து நடித்தவர்கள் என பலர் அவர் இறந்ததை அடுத்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் விஜய், தம்பி ராமையா, பாண்டியராஜ், ராதா, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர். நேரில் வரமுடியாத கமல்ஹாசன், அவருக்காக இரங்கல் பதிவினை வெளியிட்டார். ஆனால், ஒரு சில டாப் திரையுலகின் பிரபலங்கள் நேரிலும் வரவில்லை, மனோஜுக்காக இரங்கல் பதிவையும் வெளியிடவில்லை. இதை வைத்து ரசிகர்கள் பரபரப்பாக பேசி வந்தனர்.

இரங்கல் தெரிவிக்காத பிரபலங்கள்..

மனோஜ் பாரதியின் மறைவிற்க்கு ஒரு சில பிரபலங்கள் நேரிலும் சமூக வலைதளத்திலும் ஒரு சில பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை. அதில் ரஜினிகாந்தும் ஒருவர். ரஜினிக்கு லைஃப் கொடுத்ததே, 16 வயதினிலே படம்தான் என பலர் சொல்லி கேட்டிருப்போம். இந்த படத்தை இயக்கியவர் பாரதிராஜா. இவருக்கு இப்படியொரு பேரிழப்பு ஏற்பட்டிருக்கும் நேரத்தில், அவருக்கு ஆதரவாக ரஜினி எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே போல, திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்த தனுஷ், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அவருடன் நடித்த சிவகார்த்திகேயன் ஆகியோர் இரங்கல் பதிவை வெளியிடவோ, நேரில் வந்து அஞ்சலி செலுத்தவோ இல்லை. இதை பார்த்த ரசிகர்கள், “என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும், இப்படியா இருப்பது?” என்று கேட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மனோஜ் பாரதிராஜாவின் இறப்புக்கு இதுதான் காரணம் - நடிகர் தம்பி ராமையா வருத்தம்

மேலும் படிக்க | மனோஜ் பாரதிராஜாவின் அதே சாயலில் அவரது மகள்கள்! வைரலாகும் குடும்ப போட்டோக்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News