ஒரே மாசத்துல இத்தன கல்யாணமா!! தமிழ் பிரபலங்களின் சர்ப்ரைஸ் திருமண அறிவிப்புகள்..

Tamil Celebrities With Marriage Announcement : இந்த மாதத்தில் மட்டும், 4 பிரபலங்கள் தங்களின் திருமண அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 18, 2025, 05:50 PM IST
  • ஒரே மாதத்தில் 4 பிரபலங்களுக்கு திருமணம்!
  • அடுத்தடுத்து மணமேடை ஏறுகின்றனர்..
  • யார் யார் தெரியுமா?
ஒரே மாசத்துல இத்தன கல்யாணமா!! தமிழ் பிரபலங்களின் சர்ப்ரைஸ் திருமண அறிவிப்புகள்..

Tamil Celebrities With Marriage Announcement : திரை பிரபலங்கள் சிலரின் திருமண அறிவிப்புகள் இந்த ஒரு மாதத்திலேயே அடுத்தடுத்து வெளியாகியிருக்கிறது. அதுவும் அவர்கள் நான்கு பெண் பிரபலங்கள் ஆவர். இவர்களில் சிலர் தங்களது நிச்சயதார்த்த அறிவிப்பையும் ஒரு சிலர் தங்களை திருமண அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கின்றனர். அவர்கள் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

அபிநயா-கார்த்திக்: 

நாடோடிகள் படத்தில் நடித்து பிரபலமான நாயகி அபிநயா. இவருக்கு காது கேட்காது மற்றும் வாய் பேசாது என்ற விஷயமே பலருக்கு தெரியாது. காரணம் அந்த அளவிற்கு நடிப்புத் திறமையை ஸ்கிரீனில் வெளிப்படுத்துபவர் அபிநயா. ஒரு நேர்காணலில் தான் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறினார். 

இவர் கடந்த மார்ச் 9ஆம் தேதியன்று, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஒரு பதிவை வெளியிட்டார். இதை எடுத்து அவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களின் இந்த திருமணம் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அர்ஜுனின் இரண்டாவது மகள்: 

ஹீரோ நடிகராக இருந்து இப்போது வில்லன் நடிகராக மாறி இருக்கும் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை திருமணம் செய்து கொண்டார். இதை எடுத்து இரண்டாவது மகளான அஞ்சனாவின் திருமண அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது. இவரை, அவரது 13 வருட காதலர் கரம் பிடிக்க இருக்கிறார். இவர்களின் எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்த ஜோடிக்கும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Tamil Celebrities

ஜனனி-ரோஷன்:

பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் அவன் இவன். இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக வந்து கலக்கியிருப்பார் ஜனனி. இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு 2014ல் வெளியான தெகிடி படம் பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவர், நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. சில நாட்களாக அமைதியாக இருந்த இவர், திடீரென இரு நாட்களுக்கு முன்பு தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டார். இவர் சாய் ரோஷன் ஷ்யாம் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர் ஒரு விமானி ஆவார். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது. இந்த ஜோடியை சூப்பர் ஜோடி, என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரியங்கா-வசி:

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பிரபல தொகுப்பாளரான பிரியங்காவிற்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. இவர் டிஜேவான வசி சச்சி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டில் இவருக்கு பிரவீன் குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதயடுத்து கடந்த இரு ஆண்டுகளாக, வசியை டேட்டிங் செய்து வந்த இவர், தற்போது திருமண பந்தத்திற்குள் இணைந்திருக்கிறார். இந்த ஜோடியை பலர் வாழ்த்தி வருகின்றனர். 

ஒரே மாதத்தில், அடுத்தடுத்து தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இப்படி திருமண அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க | அர்ஜுனின் 2வது மகளுக்கு வெளிநாட்டு மாப்பிளை – நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்!

மேலும் படிக்க | வயதானவரை திருமணம் செய்த பிரியங்கா? எத்தன வயசு வித்தியாசம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News