ஜூலை மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிறைய புது படங்கள் வெளியாக உள்ளது. இந்த வாரம் ஜூலை நான்காம் தேதி சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்துள்ள 3 BHK படம் வெளியாகி உள்ளது. மேலும் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள அக்கணம் படமும், ராம் இயக்கத்தில் மிர்சி சிவா, அஞ்சலி நடித்துள்ள பறந்து போ படமும், விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள பீனிக்ஸ் படமும் வெளியாகியுள்ளது. இவற்றில் பறந்து போ மற்றும் 3 BHK படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் படிக்க | 2025ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த 5 படங்கள்! என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ..
இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் ஜூலை 10ஆம் தேதி சசிகுமார், லிஜோமல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள Freedom படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சத்திய சிவா இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து விமல், ஜனநாதன் புஜிதா, புகழ் நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 படம் ஜூலை 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எழில் இந்த படத்தை இயக்க வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ராஜு ஜெயமோகன், பவ்யா திரிகா மற்றும் சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள Bun Butter Jam படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகிறது. காமெடி மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் விதத்தில் படம் உருவாகி உள்ளது. விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









