வரிசையாக Flop கொடுத்து வரும் 4 டாப் தமிழ் நடிகர்கள்! யாரெல்லாம் தெரியுமா?

Top Tamil Actors With Continues Flop Movies : தமிழ் திரையுலகில் இருக்கும் டாப் நடிகர்கள் சிலர் வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 10, 2025, 11:58 AM IST
  • தொடர்ந்து flop கொடுக்கும் ஹீரோக்கள்
  • எல்லாருமே டாப் நடிகர்கள்
  • யார் யார் தெரியுமா?
வரிசையாக Flop கொடுத்து வரும் 4 டாப் தமிழ் நடிகர்கள்! யாரெல்லாம் தெரியுமா?

Top Tamil Actors With Continues Flop Movies : தமிழ் திரையுலகை பாெறுத்தவரை, ஒரு சில நடிகர்களின் படங்கள் மட்டும்தான் மக்களின் வரவேற்பை பெறும் என்கிற நிலை இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அந்த நிலை மாறியிருக்கிறது. புது ஹீரோவாக இருந்தாலும், பழைய ஹீரோவாக இருந்தாலும், கதை நன்றாக இருந்தால் மட்டுமே படம் நன்றாக ஓடுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, டாப் நடிகர்களின் படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சறுக்கி வருகிறது. அப்படி தொடர்ச்சியாக ஃப்ளாப் கொடுத்து வரும் நடிகர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.

கமல்ஹாசன்:

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி கடைசியாக ஹிட் கொடுத்த படம் எது? என்று கேட்டால், அவரது ரசிகர்களே கண்ணை மூடிக்கொண்டு விக்ரம் என்பர். 2022ல் வெளியான இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இந்தியன் 2 நெகடிவ் விமர்சனங்களை பெற்றதோடு மட்டுமன்றி பாக்ஸ் ஆபிஸிலும் பெரிதாக சறுக்கியது. இப்போது இதே நிலைதான் தக் லைஃப் படத்திற்கும் வந்திருக்கிறது. கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படம் தங்களை பெரிதாக ஏமாற்றியுள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.

கமலின் நடிப்பில் 80கள், 90கள் மற்றும் 2000 காலத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ஹிட் ஆகியிருக்கின்றன. ஆனால், இப்போது இப்படி அவரது படங்கள் சொதப்பி வருவது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

Kamal Haasan Suriya

சூர்யா:

தனது 28 வருட திரை வாழ்க்கையில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் சூர்யா. ஆனால், சமீப காலங்களாக ஹீரோவாக நடிப்பதை விட பல படங்களில் காமியோ கதாப்பாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாப்பாத்திரம் அதற்கு ஒரு பெரிய காரணமாக இருக்கலாம். கடந்த ஆண்டு அவரை கவிழ்த்துவிட்ட கங்குவா படத்தை பற்றி பேசவே வேண்டாம். இந்த ஆண்டில் வெளியான ரெட்ரோவும் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது. அடுத்து ஆர்.ஜே.பாலாஜியின் சூர்யா 45 மற்றும் வெங்கி அட்லூரியின் சூர்யா 46 ஆகிய திரைப்படங்கள்தான் இவரது மார்கெட்டை காப்பாற்ற வேண்டும்.

விக்ரம்:

“நல்ல நடிகர், கடின உழைப்பாளி..இருந்தாலும் ஏன் இவரது படங்கள் ஹிட் ஆவதில்லை என்று ரசிகர்கள் விக்ரமை பார்த்து அடிக்கடி சொல்வதுண்டு. பல நடிகர்கள், ஒரு சில படத்திற்காகத்தான் தனது உடலை மாற்றுவது, தன்னை மெருகேற்றுவது போன்ற விஷயங்களை செய்வர். ஆனால், விக்ரம் அனைத்து படங்களுக்காகவும் தன்னை மாற்றிக்கொண்டே இருப்பார்.

விக்ரம் நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளில் வெளியான பெரும்பாலான படங்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. இவர் நடித்து முடித்த துருவ நட்சத்திரம் படம் இன்னும் வெளியாகவே இல்லை. அவர் நடித்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்கள் வெற்றி படங்களாக இருந்தாலும், அதில் அவர் மட்டும் ஹீரோ கிடையாது. கடந்த ஆண்டு தங்கலான், இந்த ஆண்டு வீர தீர சூரன் என நல்ல கதைகள் கொண்ட படங்களாக இருந்தாலும், இவை  மக்களை ஈர்க்க தவறி வருவது ஏனோ தெரியவில்லை.

Ravi Mohan

ரவி மோகன்:

ரவி மோகன் என்று அழைக்கப்படும் ஜெயம் ரவி, ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்தார். ஆனால், இப்போது அவரது ரொமாண்டிக் காமெடி படங்கள் வந்தாலும் அதனை பார்க்க ரசிகர்கள் தயங்கி வருகின்றனர். இறைவன், சைரன், பிரதர், காதலிக்க நேரமில்லை என வரிசையாக இவர்  நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது. அடுத்ததாக கராத்தே பாபு, பராசக்தி, ஜீனி, தனி ஒருவன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். யோகி பாபுவை ஹீரோவாக வைத்தும் ‘ப்ரோ கோட்’ எனும் பெயரில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

அஜித்குமார்:

சமீபத்தில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் ரீதியாக ஹிட் அடித்திருந்தாலும், இதற்கு விமர்சனங்கள் பாசிடிவாக அமையவில்லை. ஒரு சிலர், இப்படம் ரீல்ஸ் பார்ப்பது போல இருப்பதாக கூறினர். வலிமை படத்தில் ஆரம்பித்து இந்த ஆண்டில் வெளியான விடாமுயற்சி படம் வரை இவருக்கு அனைத்தும் சறுக்கலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர்!! ரஜினி, கமல் இல்லை..வேறு யார்?

மேலும் படிக்க | 2025-ல் ரசிகர்களை முட்டாளாக்கிய 3 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News