)
Logical Mistakes In Coolie : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம், கூலி. இந்த திரைப்படம் ரிலீஸானதிலிருந்து கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. படம் நன்றாக இருப்பதாக கூறும் ஒரு சிலர் கூட சில மாற்றங்களை செய்திருந்தால் படம் இன்னும் பெரிதாக பேசப்பட்டிருக்கும் என்றே கூறி வருகின்றனர். இந்த நிலையில், படத்தில் இருக்கும் சில லாஜிக் ஓட்டைகள் குறித்தும் சிலர் பேசி வருகின்றனர். இது குறித்து இங்கு பார்ப்போம்.
இந்த செய்தியில் படத்தின் ஸ்பாயிலர்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, படத்தை இன்னும் பார்க்காதவர்கள், கதையை தெரிந்து காெள்ள வேண்டாம் என்று நினைத்தால் இந்த செய்தியை படிக்க வேண்டாம்.
கூலி திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ், ராஜசேகர் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இவர், ஃப்ளேஷ்பேக் காட்சியில் கூலிகளுக்கு மேனேஜராக இருப்பார். அப்படி இருப்பவர், 30 வருடங்கள் கழித்து சைண்டிஸ்ட் ஆனது எப்படி? என்கிற கேள்விக்கு படத்தில் விடை இல்லை. இது படத்தின் பெரிய லாஜிக் ஓட்டையாக பார்க்கப்படுகிறது.
சத்யராஜ் இறந்த போது வீட்டிற்கு வரும் ரஜினியை, விரட்டி அடித்து விடுவார் ஸ்ருதிஹாசன். இதை பார்க்கும் போது, ரஜினி ஏதோ பெரிய தவறு செய்திருப்பது போலவும், அதனால் ஸ்ருதி அவரை மன்னிக்காதது போலவும் இருக்கும். ஆனால் உண்மையில் தனது அப்பா கோபமாக இருந்ததால்தான், தானும் கோபமாக இருந்ததாக ஸ்ருதிஹாசன் பேசியிருப்பார். எனவே, இதற்கும் படத்தில் நியாயம் வழங்கப்படாதது போல இருந்தது.

எலக்ட்ரிக் நாற்காலி:
கூலி படத்தில் அந்த எலக்ட்ரிக் நாற்காலியை எப்படி இயக்குவது என்று தெரியாததால்தான் ஸ்ருதிஹாசனை தேடி மீண்டும் வில்லன் தேடி வருவார். ஆனால், அதை ரஜினிக்கு ஸ்ருதிஹாசன் சொல்லிக்கொடுக்கும் போது ஈசியாகத்தான் இருக்கும். இதை அந்த வில்லன்கள் பார்த்திருந்தாலே கற்றுக்கொண்டிருப்பார்களே, இதற்கு பின்னால் ஏன் இப்படியொரு ட்விஸ்டை வைக்க வேண்டும் என்கிற கேள்வி இருந்தது.
ரயில் ட்ரைவர் இறப்பு:
செளபின், ஸ்ருதியை ட்ரைனில் கடத்தி செல்லும் போது, அந்த ரயிலின் ட்ரைவரை கொன்று விடுவார். இது ஏன்? அடுத்த ஸ்டேஷனில் இறங்கி கூட தங்களது இருப்பிடத்திற்கு ஸ்ருதியை அழைத்து சென்றிருக்கலாமே என்கிற கேள்வி படத்தை பார்க்கும் போது எழுந்தது.
இறந்தவர் திரும்பி வந்தது எப்படி?
படத்தில் சௌபின் இறந்தது போன்ற காட்சி இருக்கும். அவரை மண்டையில் அடித்து நொறுக்கிய பிறகு, ஐஸ் பேக்கில் வைத்திருப்பர். ஆனால் ரஜினி கொட்டும் மழையில் அந்த உடலை புதைப்பார். அப்போது திடீரென சௌபினுக்கு உயிர் வந்துவிடும். அத்தனை அடி அடித்த பின்பு, ஐஸில் வைத்த பின்பு அவருக்கு உயிர் வந்தது எப்படி என நமக்குள் கேள்வி வரும். ஸ்ருதி ஹாசன் அதற்கு “ஷாக்கால் இதயம் நின்று போகும் போது இப்படி external factorஆல் உயிர் வரும்” என்று கூறுவார். ஆனால், அது என்ன external factor என்பதை அவர் கூறவில்லை. அவர் அவ்வளவு அடி வாங்கிய பின்பும், ஸ்ருதிஹாசனை அடித்து, ஒருவரை கடத்தி கொண்டு போவதுதான் ஹைலைட்.

ஏஜெண்ட் டீனா போல ஒரு கேரக்டர்..
விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா வருவது போல, கூலி படத்திலும் ஒரு கேரக்டர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கேரக்டரின் அழுத்தத்தை யாராலும் உணர முடியவில்லை. அவர் படத்தில் இருந்ததது பெரிய ட்விஸ்ட் என்றாலும், அவரது கேரக்டர் பல இடங்களில் தேவையற்ற ஆணி போலத்தான் தோன்றியது.
குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் லாஜிக்கல் ஓட்டைகள் ரசிகர்களின் கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இது ZEE MEDIA தனியாக கூறும் விஷயமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ