)
Lokah Chapter 2 Begins : மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம், லோகா. இந்த யுனிவர்ஸின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
லோகா திரைப்படம்:
சில நாட்களுக்கு முன்பு, ‘லோகா சேப்டர் 1 சந்திரா’ படம் வெளியானது. இந்த படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார். முக்கிய கதாப்பாத்திரங்களில் நஸ்லேன், விஜயராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில், பழங்கால கதையாக சொல்லப்படும் ‘யக்ஷி’ எனப்படும் ரத்தக்காட்டேரியின் கதை கூறப்பட்டது.
வழக்கமாக, ஆண் சூப்பர் ஹீரோக்கள்தான் பில்டிங்கிற்கு பில்டிங் தாவித்தாவி வில்லன்களிடம் சண்டை போடுவது போல காண்பிக்கப்படும். ஆனால், லோகா படத்தில் வித்தியாசமாக பெண் சூப்பர் ஹீரோவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை டோமினிக் அருண் இயக்கியிருந்தார்.
அடுத்த படம்!
லோகா திரைப்படம் முடியும் போது, அதன் எண்ட் கிரெடிட்ஸ் காட்சியில் சாத்தானாக வந்த ‘மைக்கில்’ கதை அடுத்த பாகமாக எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த கதாப்பாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இவர், இதில் கேமியோ கேரக்டரில் சில நிமிடங்களுக்கு மட்டும் வந்திருந்தார். இதையடுத்து, அடுத்த இவரது படம் எடுக்கப்படும் என்பது தெளிவானது.
புது அறிவிப்பு!
லோகா யுனிவர்ஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தையும் டோமினிக் அருண் இயக்குகிறார். முதல் படத்தை தயாரித்த Wayfarer films இந்த படத்தை தயாரிக்கிறது. இதன் ப்ரோமோ வீடியோவில் டோவினோ தாமஸும், துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.
படத்தின் கதைக்கான ஹிண்ட் உடன் இந்த ப்ரோமோ தொடங்கியது. அதில், மைக்கில் தனது சகோதரன் தன்னையும் மூத்தோனையும் தேடி வருவதாகவும், தான் அழைத்தால் நீ வர மாட்டாயா என்று துல்கரிடம் கேட்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இப்படம், அனேகமாக அடுத்த வருடம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
Beyond myths. Beyond legends. A new chapter begins. #LokahChapter2
— Dulquer Salmaan (@dulQuer) September 27, 2025
Starring Tovino Thomas.
Written & Directed by Dominic Arun.
Produced by Wayfarer Films.https://t.co/2nkuQQGGKs
#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @ttovino @dominicarun@NimishRavi pic.twitter.com/ISBrL8Xan0
லோகா வசூல்!
லோகா திரைப்படத்திற்கு மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியிலும் படம் நன்றாக ஓடியது. இப்போது வரை, படம் உலகளவில் சுமார் ரூ.282 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ