தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.  அதனைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.  'தளபதி 66' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க போகிறது, இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் தெலுங்கு ரசிகர்களின் மனதையும் கொள்ளையடிக்க போகிறார்.  அடுத்ததாக தளபதி 67 குறித்த சலசலப்பு எழுத்து வந்தது, இதனை யார் இயக்கப்போகிறார்கள் என்று என்று கேள்விகள் எழுந்து வந்தது.  அந்த சமயம் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் தளபதி 67 படத்தை இயக்குவார் என்கிற பேச்சுகளும் அடிபட்டு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ரெண்டுல ஒன்னு பாக்கலாம்..! வெளியானது ஜாலியோ ஜிம் கானா பாடல்!


தளபதி 67 பற்றி ஏதாவது ஒரு ருசிகர தகவல் வெளியாகுமா என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.  கலையரசன் நடிப்பில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள 'குதிரைவால்' படத்தின் சிறப்பு காட்சி வெளியிடல் நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டுள்ளார்.  அப்போது அவரிடம் விஜயுடன் மீண்டும் எப்போது இணைந்து பணியாற்ற போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த இயக்குனர் லோகேஷ் தளபதி 67 குறித்து நடிகர் விஜயிடம் பேச்சுக்குவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது, இந்த திட்டம் உறுதி செய்யப்பட்டால் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.



இந்த திட்டம் உறுதியானால் இந்த ஆண்டின் இறுதியில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது கமல்ஹாசனை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார்.  ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஜூன்-3ம் தேதி வெளியாகவுள்ளது.


மேலும் படிக்க | டாப் ஹீரோக்கள் படங்களை பங்கமாய் கலாய்த்த ஆர்ஜே பாலாஜி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR