சாதியை வைத்து வாய்ப்பு தருகிறாரா மாரி செல்வராஜ்..? அவரே கொடுத்த விளக்கம்..!
Mari Selvaraj: மாமன்னன் படத்தை இயக்கி வெற்றி இயக்குநராக முத்திரை பதித்துள்ள மாரி செல்வராஜ் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
‘மாமன்னன்’ படத்தை இயக்கி தற்போது தமிழ் சினிமாவின் மாமன்னனாக உயர்ந்துள்ள இயகுநர் மாரி செல்வராஜ். இவர், சாதியை அடிப்படையாக வைத்து தன் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருகிறார் என சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
மாரி செல்வராஜ்:
2018ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி, முதல் படத்திலேயே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து, தனுஷை வைத்து 2021ஆம் ஆண்டில் கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படம், சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து அவர் எடுத்த படம் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம், தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது.
மேலும் படிக்க | சினிமாவில் சாதி கிடையாது - சின்ன கவுண்டர், எஜமான் படத்தின் இயக்குனர் பேச்சு!
‘தேவர் மகன்’ சர்ச்சை
மாமன்னன் ரிலீஸிற்கு முன்பாக அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டார். இந்த விழாவின் போது பேசிய மாரி செல்வராஜ், தேவர்மகன் படம்தான் தன்னை மாமன்னன் போன்ற படங்களை எடுக்க தூண்டியதாக கூறினார். அவர் கூறிய கருத்து சாதிய ரீதியாக இருந்ததாகவும், கமலை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர் படத்தை பற்றி மேடையில் குறை கூறியது சரியில்லை என்றும் பலர் மாரி செல்வராஜ் மீது விமர்சனங்களை வீசினர். மாமன்னன் பட ரிலீஸின் போதும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் போர்கொடி தூக்கினர்.
குற்றச்சாட்டுகள்:
‘தேவர் மகன்’ பட சர்ச்சையை தொடர்ந்து, மாரி செல்வராஜ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. தன் படத்தில் நடித்தவர்களை ஷாட் நன்றாக வரவேண்டும் என்பதற்காக இவர் அடித்து துன்புருத்தியதாக சில தகவல்கள் வெளியானது. அது மட்டுமன்றி, தன் படத்தில் நடிப்பவர்களுக்கு சாதிய ரீதியில் வாய்ப்புகள் வழங்குவதாகவும் சிலர் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இதற்கு மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
மாரி செல்வராஜ் விளக்கம்..
மாரி செல்வராஜ், சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், தான் 15 வருடங்களாக சினிமா துறையில் கஷ்டப்பட்டு வருவதாகவும், பா.ரஞ்சித்தான் தனக்கு ஆரம்பத்தில் நிறைய உதவிகள் செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், தன் படத்தில் நடிப்பவர்கள், தன்னுடன் வேலை செய்பவர்கள் என அனைவரும் வெவ்வேறு வகையான பிண்ணனியில் இருந்து வருவதாகவும், தான் சாதிய அடிப்படையில் யாருக்கும் வாய்ப்புகளை வழங்குவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படத்திற்கு மக்கள் வரவேற்பு:
மாரி செல்வராஜ் பேச்சு சர்ச்சையானதை தொடர்ந்து படம் ரிலீஸான முதல்நாள் கலவையான விமர்சனங்களையே மாமன்னன் திரைப்படம் பெற்றது. ஆனால், தொடர்ந்து மக்கள் இப்படத்தை காண படையெடுத்துதான் வருகின்றனர். படத்தில் இடம் பெற்றிருந்த வடிவேலுவின் கதாப்பாத்திரம், உண்மையான ஒருவரை வைத்து எழுதப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், தமிழக அரசியல் களத்தை இதில் காண்பித்திருப்பதாகவும் கூறப்பட்டது.
மாஸாக கம்-பேக் கொடுத்திருக்கும் வடிவேலு:
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறையினரால் பல்வேறு படங்களில் இருந்து நிராகரிக்கப்பட்டார். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அவருக்கு ரெட்-கார்டு காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர், பெரிதாக சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. வெற்றிபெறும் என நினைத்த பல படங்கள் தோல்வியில் முடிந்தன. தற்போது, இதுவரை நடித்திராத ஒரு பாணியில் புதிதாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார் வடிவேலு. இது, அவரது சினிமா ரீ-எண்ட்ரியில் மாஸ் கம்-பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சினிமாவை விட்டு விலகும் சமந்தா..? ‘அந்த’ பாதிப்புதான் காரணமா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ