மாநகரம் பட நடிகர் ஸ்ரீ-க்கு என்னாச்சு.. வைரலாகும் புகைப்படம்!

மாநகரம் படம் ஹிரோ ஸ்ரீ எழும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - R Balaji | Last Updated : Apr 13, 2025, 09:12 PM IST
  • நடிகர் ஸ்ரீ மாநகரம், வழக்கு எண் 18/9 போன்ற படங்களில் நடித்துள்ளார்
  • இவரது நடிப்பில் கடைசியாக இறுகப்பற்று படம் வெளியானது
  • தற்போது அவர் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
மாநகரம் பட நடிகர் ஸ்ரீ-க்கு என்னாச்சு.. வைரலாகும் புகைப்படம்!

கடந்த 2006ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ. இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது. பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தில் நடித்திருந்தார். இதற்காக அவருக்கு விஜய் டிவி சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் வழங்கியது. 

Add Zee News as a Preferred Source

இதையடுத்து அவர் ஓநாயும் ஆட்டுக்குடியும், சோன் பப்டி, வில் அம்பு, மாநகரம் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹிந்தியிலும் இப்படம் ரீ மேக் செய்யப்பட்டு மும்பைக்கார் என்ற பெயரில் வெளியானது. மாநகரம் படத்தை தொடர்ந்து ஸ்ரீக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் போட்டி தொடங்கிய முதல் வாரத்திலேயே தனிப்பட்ட காரணத்தை சொல்லி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கடைசியாக இறுகப்பற்று படத்தில் நடித்தார். 2023ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஸ்ரீ என்ன ஆனார் என்பது தெரியவில்லை. 

இந்த நிலையில்தான், நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எலும்பும் தோலுமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் போட்டோவை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் தலைமுடியை கலரிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதைபார்த்த இணையவாசிகள், ப்ரோ என்ன ஆச்சு இப்படி ஆகிட்டீங்க என பலரும் அறிவுரையும் கூறி வருகின்றனர். 

மேலும் படிங்க: திடீரென வைரலான தொட்டு தொட்டு பேசும் சுல்தானா! இந்த பாடல் எந்த படம் தெரியுமா?

மேலும் படிங்க: ஜிவி பிரகாஷ் - சீனு ராமசாமி கூட்டணியில் வெளியாகும் இடிமுழக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News