)
Maargan Love Marriage Kannappa Films Which Is Worth : ஜூன் மாதத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு தென்னிந்திய திரையுலகில் பல திரைப்படங்கள் வெளியாகின. தமிழில் மார்கன், லவ் மேரேஜ் உள்ளிட் படங்கள் வெளியாக, ஆங்கிலத்தில் F1, தெலுங்கில் கண்ணப்பா ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்த 4 படங்களும் ரசிகர்கள் மத்தியில் என்ன வரவேற்பை பெற்றுள்ளது என்பதையும், இங்கு பார்ப்போம்.
மார்கன்:
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம், மார்கன். லியோ ஜான் பால் இயக்கியிருக்கும் இந்த படம், கிரைம் த்ரில்லர் கதையை கொண்ட படமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, விஜய் ஆண்டனி நடித்து வந்த திரைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்க தவறியது. இப்போது மார்கன் திரைப்படம் அதற்கு மாறுதலாக இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது.
லவ் மேரேஜ்:
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி இருக்கும் படம், லவ் மேரேஜ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுஷ்மிதா நடித்திருக்கிறார். ரமேஷ் திலக், சத்தியராஜ், மீனாக்ஷி தினேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். இந்த படம், நல்ல குடும்ப-காமெடி டிராமாவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை ஷன்முக பிரியன் இயக்கியிருக்கிரார். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளனர். இது, விக்ரம் பிரபுவிற்கு நல்ல கம்-பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணப்பா திரைப்படம்:
தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் கண்ணப்பா திரைப்படத்தில் பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, மோகன் லால், அக்ஷய் குமார், மோகன் பாபு, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சிவ பக்தர் என புராணங்களில் கூறப்படும் கண்ணப்பா எனும் சிவ பக்தர் குறித்த கதை இதுவாகும். பெரும் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் ப்ரமோஷன்களில், “விமர்சனங்களை வெளியிடுபவர்கள், படத்தை குறை கூறுபவர்கள் பெரும் விளைவுகளை சந்திப்பர்” என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனாலேயே பலர் இந்த படத்திற்கு பாசிடிவாக மட்டும் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
F1 திரைப்படம்:
டாம் ஆங்கிலத்தில் ப்ராட் பிட் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், F1. இது, கார் ரேசிங் குறித்த திரைப்படமாகும். இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு ஓரளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி இந்த படத்தை பார்த்த சிலர், படம் நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த படம் எது?
தமிழ் ரசிகர்கள், பெரும்பாலும் தமிழ் படங்களுக்கே முன்னுரிமை கொடுப்பர். அந்த வகையில், மார்கன் மற்றும் லவ் மேரேஜ் ஆகிய படங்களைதான் பெரும்பாலானோர் பார்த்துள்ளனர். இதில், இரு படங்களுக்குமே பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன. கண்ணப்பா படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெறுகியிருக்கிறது. ஒட்டு மொத்தமாக, 3 படங்களும் ரசிகர்களையுமே பார்க்கலாம் என்று ரசிகர்கள் தெரிவத்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ