)
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சமையல் கலைஞரும், 'மெஹந்தி சர்க்கார்' படத்தின் கதாநாயகனுமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் எளிமையான முறையில் கோவிலில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜாய் கிரிசில்டா 6 மாத கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தான் அவர்களின் திருமணத்திற்கான காரணமாக இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் துறையில் ஒரு முக்கிய பிரபலம். பெரிய அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களின் வீட்டுத் திருமணங்களுக்கு இவர்தான் முதன்மை சமையல் கலைஞர். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும், 2019ல் வெளியான 'மெஹந்தி சர்க்கார்' படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். முதல் படத்துக்குப் பிறகு, அவர் மீண்டும் சமையல் துறையில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார் என்ற தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு பரவின.
மேலும் ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தன. தற்போது, அதை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்து, ரங்கராஜை "மை மேன்" எனக் குறிப்பிட்டு, திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த திருமணம், இரு வீட்டாரின் சம்மதத்துடன், எளிமையான முறையில் கோவிலில் நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும் ஜாய் கிரிசில்டா?
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு பதிவை வெளியிட்டார். அதில், தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இது ரங்கராஜ் - ஜாய் ஜோடியின் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தினரிடையே ஆச்சரியத்தையும், சில விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்ததால் தான், இந்த திருமணம் அவசரமாக நடத்தப்பட்டதா என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இந்த ஜோடி இது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தங்களின் புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டாவின் பின்னணி
மாதம்பட்டி ரங்கராஜ், தனது சமையல் திறமைக்காகவும், எளிமையான குணத்துக்காகவும் அறியப்பட்டவர். அவரது சமையலுக்காக லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்தாலும், அவரது சுவைக்காக பலரும் அவரைத் தேடி தேடி புக் செய்து வருகின்றனர். ஜாய் கிரிசில்டா, சினிமா துறையில் ஒரு ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இருவரின் தொழில்முறை பின்னணியும், அவர்களின் காதலுக்கு உதவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த திருமணம், தமிழ் சினிமா உலகில் சமீபத்தில் நடந்த பிரபல திருமணங்களில் ஒன்றாகும். அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய ரசிகர்கள் வாழ்த்துகின்றனர். மேலும், ஜாய் கிரிசில்டாவின் கர்ப்ப அறிவிப்பு, அவர்களின் குடும்பத்தில் புதிய மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ