)
மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சலையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சூழலில், சமீப நாட்களாக இவர் தொடர்பான சர்ச்சைதான் இணைத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார் என கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகைப்படத்தை வெளியிட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதால், ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரங்கராஜ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ போன்றவற்றை வெளியிட்டதால், நாளுக்கு நாள் சர்ச்சைகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் என்னை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகவும், திருமணம் செய்துக்கொண்டதையே மறுக்கிறார் என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு மத்தியில் மாதம்பட்டி ரங்கராஜ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன் என்றும் ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நீதிமன்றத்திற்கு வெளியே திருமதி ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும்.
இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன். இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை. ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ