Madhampatty Rangaraj Joy Crizildaa Investigation : கடந்த சில வாரங்களாகவே, பெரிதாக சென்று கொண்டிருக்கும் விஷயமாக இருக்கிறது மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா விவகாரம். இதில், மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணைகு இருவரையும் ஆஜர் படுத்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் ஆஜர்!
மெகந்தி சர்கஸ், பென்குயின் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதைத்தாண்டி, இவருக்கு முதன்மை தொழிலாக இருக்கிறது கேட்ரிங் சமையல். பல பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு இவரது நிறுவனத்தில் இருந்துதான் கேட்டரிங் ஆர்டர் செல்கிறது. இவருக்கும் ஜாய் கிரிஸில்டாவிற்கும் நெருங்கிய உறவு இருப்பதாக முன்னரே கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து சில மாதங்கள் கழித்து, மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்த புகைப்படத்தை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டார். கூடவே, தான் கர்ப்பமாக இருப்பதையும் கூறினார். இது குறித்து வாயே திறக்காத மாதம்பட்டி ரங்கராஜ், தன் மனைவி ஸ்ருதியுடன் வெளியில் விசேஷங்களுக்கு செல்வதை வழக்கமாக்கினார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில், சில வாரங்களுக்கு முன்னர், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். தற்போது இந்த வழக்கின் விசாரணை காரணமாக, இருவரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
முதல் மனைவியுடன்..
இந்த வழக்கு விசாரணைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் நேரில் ஆஜராகியிருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாய் கிரிஸில்டா சிங்கிளாக விசாரணை நடக்கும் இடத்திற்கு வந்தார். இத்தனை நாட்களாக, தன் முதல் மனைவியுடன் எங்கும் தலைக்காட்டாத மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்த பிறகு எங்கு சென்றாலும் அவரை கூட்டி செல்வது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பதிவு!
மாதம்பட்டி ரங்கராஜ், இந்த விவகாரம் குறித்து நேற்று முதன்முறையாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
“நீதிமன்றத்தில் வெளியே திரும்பி ஜாய் கிரிஸில்டா எழுதிய தவறான சர்ச்சை கருத்து வைத்துப் பலரும் என்னை தொடர்பு கொண்டுள்ளனர்.
நீதித்துறையின் செயல்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதால், சட்டப்படி இதற்கான தீர்ப்பு வரும். இந்த விவகாரம் குறித்த எனது சட்ட ஆலோசகர் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் இந்த விவகாரம் பற்றிய எந்த குழப்பமும் தேவையில்லை. எனது தனிப்பட்ட வாழ்வில் நான், எனது குடும்பமும் நானும் நிம்மதியாக இருக்கிறோம். அனைவரின் அன்பும், நம்பிக்கையும் எனக்கு உறுதுணையாக உள்ளது. நடப்பது குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும், யாரும் அவ்வாறு செய்தால் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சட்டத்தை மதிக்கிறேன். சட்டத்திற்குள் இருந்து நீதியை பெறுவேன். ஜாய் கிரிஸில்டா குறித்து வெளியில் எந்தவித பேட்டியும் வெளிவராது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறியிருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜின் இந்த பதிவிற்கு ஜாய் கிரிஸில்டாவும் ஒரு பதிலை தெரிவித்து இருக்கிறார். “முதலில் நீங்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வாங்க, சட்டம் தன் கடமையை செய்யும். நீங்கள் சட்டத்திற்கு முன்பு, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. நானும், இந்த பிரச்சனையை சட்டப்பூர்வமாகத்தான் எதிர்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | மாதம்பட்டி ரங்கராஜை பழிவாங்கும் ஜாய் கிரிஸில்டா? அவர் செய்ற வேலைய பாருங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









