Madhampatty Rangaraj Joy Crizildaa Investigation : சின்னத்திரையுலகில், கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஒரு சர்ச்சைதான், மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா இடையே இருக்கும் பிரச்சனை. இது குறித்த முழு விவரத்தையும், அவர்கள் விரைவில் மகளிர் ஆணையத்தில் ஆஜராக இருப்பது குறித்தும் முழுமையாக பார்ப்போம்.
மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா பிரச்சனை:
சமையல் கலை நிபுணராகவும், நடிகராகவும் அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், கடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசனில் புது நடுவராக அறிமுகமாகி, அதிலிருந்து மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமானார். இவரும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவும் உறவில் இருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சர்ச்சை எழுந்தது. ஆனால், இதனை இருவருமே உறுதிப்படுத்தவில்லை. இது சர்ச்சையானதற்கு காரணமே, மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணம் ஆணவர் என்பதால்தான்.
ஜாய் கிரிஸில்டா, கடந்த ஜூலை மாதம் முதலாக மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்தார். கூடவே, பயோவிலும் தான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என்பதையும், தனக்கு குழந்தை பிறக்கப்போகும் விவரத்தையும் சேர்த்தார். சில வாரங்களுக்கு முன்பு, தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதிலிருந்து ஆரம்பித்த பிரச்சனை, தற்போது மகளிர் ஆணையம் வரை சென்றிருக்கிறது.
நேரில் ஆஜராக உத்தரவு!
ஜாய் கிரிஸில்டா, சில நாட்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்தார். இதையடுத்து விசாரணைக்காக இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று, மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இருவரும் தற்போது ஒன்றாக சந்திக்க உள்ளனர்.
சட்டம் பயிலும் ஜாய் கிரிஸில்டா?
ஜாய் கிரிஸில்டா, கடந்த சில மாதங்களாகவே வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துடன் தொடர்புடைய சிலருடன் சேர்ந்து பயணித்து வருகிறார். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னதாக தனது பயோவில் தன்னை, ‘சட்டம் பயிலும் மாணவி’ என்று சேர்த்துக்கொண்டுள்ளார். எனவே, இவர் சட்டம் பயிலுகிறாரா என்று சிலர் கேட்க, அதற்கு “விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்திருந்தார்.
வாயே திறக்காத முதல் மனைவி..
மாதம்பட்டி ரங்கராஜ் விஷயத்தில், அவரது முதல் மனைவி ஸ்ருதி இன்னும் வாய் திறந்து எதுவும் பேசவே இல்லை. மாறாக, ஜாய் கிரிஸில்டா குறித்த சர்ச்சை எழுந்த பின்பு ரங்கராஜ் கலந்து கொண்ட விழாக்களில் அவரும் உடன் கலந்து கொண்டு, அருகில் அமர்ந்திருந்தார். இவர் யாரை காப்பாற்றுவதற்காக இப்படி அமைதியாக இருக்கிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
மேலும் படிக்க | முதல் மனைவி காலில் விழுந்து கெஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ்? இது தெரியாம போச்சே!
மேலும் படிக்க | ஷபானாவிடம் வம்பு செய்த மாதம்பட்டி ரங்கராஜ்? நடந்தது என்ன? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









