)
Shruthi Rangaraj Recent Post : சமீபத்தில் சர்ச்சைக்குரிய பிரபலமாக மாறியிருக்கிறார், மாதம்பட்டி ரங்கராஜ். இவர் குறித்து ஜாய் கிரிஸில்டா பேசியிருக்கும் விஷயங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை அடுத்து, அவரது முதல் மனைவி ஸ்ருதியின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்ச்சையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!
மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்து பிரபலமானவர், மாதம்பட்டி ரங்கராஜ். அதன் பிறகு பென்குயின் படத்திலும் நடித்தார். இவரை பெரும்பாலும் பலருக்கு சமையல் கலைஞராகவே தெரியும். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புது நடுவராக வந்த பலரது கவனத்தை ஈர்த்தார். இவர் பெண்களிடம் கண்ணியமாக பழகுவதாக பலர் இவர் குறித்து எடிட் செய்து வந்த நிலையில், ஜாய் கிரிசில்டா என்பவர் கொடுத்த புகார், பகீர் கிளப்பியது.
2023 ஆம் ஆண்டு முதல் தான் மாதம்பட்டி ரங்கராஜுடன் வாழ்ந்து வருவதாகவும், அவருடன் தனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து விட்டதாகவும் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார். மேலும், கர்ப்பமாகி விட்டு இப்போது தன்னுடன் அவர் பேசுவதே இல்லை என்றும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது திரையுலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வழக்கு விசாரணை!
ஜாய் கிரிசில்டா, சில வாரங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் மீது புகார் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்திலும் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். இது குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜன் ஜாய் கிரிசில்டா மீது வழக்கு தொடர்ந்தார். அவரால், தொழிலில் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அவர் தன்னைக் குறித்து பதிவிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், நஷ்டம் ஏற்பட்டதற்குஉரிய சான்றுகள் அளித்தால் இது குறித்து விசாரிக்கலாம் என்று கூறியிருந்தது. அதேபோல மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பேச ஜாய் கிருஷ்ணாவிற்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறியிருந்தது.
முதல் மனைவியின் பதிவு!
இத்தனை சம்பவத்திற்கு இடையேயும், முதல் மனைவி ஸ்ருதி வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார். இவரது மௌனம் குறித்து இணையவாசிகள் பலரும் பலவாறு பேசி வருகின்றனர். நீண்ட நாட்களாக இன்ஸ்டாவில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த இவர், சமீப நாட்களாக ஸ்டோரி அல்லது பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அவர், காருக்கு முன் நின்று எடுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கேப்ஷனில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம்
வளரது கவனத்தை பெற்றுள்ளது.
“Habibi! Together us against the world!!” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு அர்த்தம், “என் அன்பே, இந்த உலகிற்கு எதிராக நாம் இருவரும்” என்பதாகும். இதன் மூலம், தான் தனது கணவருக்கு ஆதரவாகத்தான் இருப்பேன் என்பதை கூற வருகிறாரா என்று பலரும் கேட்டு வருகின்றனர். ஜாய் கிரிஸில்டா, காவல் நிலைய படிக்கட்டை ஏற, அதற்கு பதிலளிக்கும் வகையில், ஸ்ருதி இப்படி பதிவிட்டிருக்கிறாரா என்று சிலர் கேட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ