)
Madhampatty Rangaraj Affidavit Youtube Channels : தமிழ் சின்னத்திரையில், அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், தன்னை ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சில நாட்களுக்கு முன்னர் கொடுத்திருந்த புகார் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதன் தொடர்ச்சியாக அவர் பிரபல யூடியூபர்கள் மீது வழக்கு பதிய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா பிரச்சனை:
மெகந்தி சர்கஸ், பென்குயின் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்த மாதம்பட்டி ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 5வது சீசனில் புது நடுவராக வந்து பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரது முகம் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. இந்த நிலையில், இவர் ஜாய் கிரிஸில்டாவுடன் உறவில் இருப்பது குறித்த சர்ச்சை எழுந்தது.
சில நாட்களுக்கு முன்பு, தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணமான புகைப்படங்களை பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் தெரிவித்தார். இதன் பிறகு, மாதம்பட்டி ரங்கராஜ் மொத்தமாக சைலண்ட் ஆகிவிட்டார்.
பின்னர், ஜாய் கிரிஸில்டா தாமாக முன்வந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்தார். தன்னை அவர் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக அந்த புகாரில் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது புகார் கிடப்பில் பாேடப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்த ஜாய், மாநில மகளிர் ஆணையத்தில் தான் மாதம்பட்டி ரங்கராஜால் ஏமாற்றப்பட்டதாக புகாரளித்தார்.
யூடியூபர்கள் மீது வழக்கு?
ஜாய் கிரிஸில்டா, சிவசங்கரி என்கிற நிருபருக்கு மட்டும், சில நாட்களுக்கு முன்னர் பேட்டி கொடுத்திருந்தார். அதில், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இடையேயான உறவு குறித்து பேசியிருந்த அவர், தான் அவரால் துன்புறுத்தப்பட்டிருந்ததாகவும், இப்போது வரை தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காகத்தான் இவ்வளவு போராட்டங்களையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
ஜாய் கிரிஸில்டா இதில் கூறியிருந்த விஷயங்கள், பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிவசங்கரி, தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து ஜாய் கிரிஸில்டாவிடம் இருந்து பெறப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அது மட்டுமன்றி, ஜாய் கிரிஸில்டா கொடுத்துள்ள புகாரையும் க்ளோசாக ஃபாலோ செய்து வருகிறார். இது, மக்களின் ஆதரவை பெற ஆரம்பித்தது.
தற்போது மாதம்பட்டி ரங்கராஜ், சிவசங்கரியின் யூடியூப் சேனலுக்கும், சையத் இப்ராஹிம் என்பவர் நடத்தும் ‘ஷா பூ த்ரீ’ யூடியூப் சேனலுக்கும் சட்டப்பூர்வ நோட்டீஸ் ஒன்றை கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன்படி, மேற்குறிப்பிட்ட யூடியூபர்கள் தாங்கள் சொல்வது உண்மைதான் என்ற பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமாம். இது நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் பத்திரமாக இருக்கும். இது, நீதிமன்ற விசாரணைக்கும் எடுத்துக்கொள்ளப்படும். அப்படி, அவர்கள் கூறியது உண்மை அல்ல என்று நிரூபிக்கப்பட்டால், இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ