Maha Shivratri 2026: சிவனாக நடித்துள்ள தமிழ் நடிகர்கள் முழு பட்டியல் இதோ!

தமிழ் சினிமாவில் சிவனின் வேடமிட்டு கச்சிதமாக நடித்துள்ள சில டாப் நடிகர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2026, 02:12 PM IST
  • இன்று நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை
  • தமிழ் சினிமாவில் சிவனின் வேடமிட்டு கச்சிதமாக நடித்துள்ள நடிகர்
Maha Shivratri 2026: சிவனாக நடித்துள்ள தமிழ் நடிகர்கள் முழு பட்டியல் இதோ!

Must Watch Tamil Maha Shivratri Movie: இன்று நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிக காலை தொடங்கிய சிவராத்திரி பூஜை நாளை அதிகாலை வரை தொடர்ந்து யாகங்கள் நடைபெறும். மொத்த நான்கு கால பூஜை நடைபெறும். இந்த பூஜையை காண மக்கள் விரதத்தை தொடங்கி அதிகாலேயே கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவது வழக்கம். 

Add Zee News as a Preferred Source

இந்நாளில் எப்படி சில மக்கள் கோவில் சென்று வழிப்படுவார்களோ, சிலர் வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் வரும் சிவ பக்தி படங்களை கண்டு நாளை கழிப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் சிவனின் வேடமிட்டு கச்சிதமாக நடித்துள்ள சில டாப் நடிகர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) - திருவிளையாடல்: 
சிவன் என்றாலே பலருக்கும் ஞாபகம் வருவது இயக்குனர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான திருவிளையாடல் படம் தான். இந்த படத்தில் சிவாஜி கணேசன் சிவனாக நடத்திய திருவிளையாடல்கள், நடனங்கள், என மக்களால் இன்று வரை மறக்க காதப்பாத்திரமாகும். குறிப்பாக "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே" என அவர் நடிப்பதை எப்போதுமே பார்த்து ரசிக்கலாம்.

ஜெமினி கணேசன் (Gemini Ganesan) - கந்தன் கருணை: 
திருவிளையாடல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கடந்த 1967 ஆம் ஆண்டு ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கந்தன் கருணை. இந்த திரைப்படத்தில் முருகராக சிவகுமாரும் சிவனாக ஜெமினி கணேசனும் நடித்துள்ளார்.

ஜெமினி கணேசன் (Gemini Ganesan) - சக்தி லீலை:
டி.ஆர். ரமணா இயக்கத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான சக்தி லீலை படத்தில் நடிகர் ஜெமினி கணேசன் சிவனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் பி. சரோஜா தேவி, ஜெமினி கணேசன், ஜெயலலிதா, கே. பி. சுந்தராம்பாள் , கே. ஆர். விஜயா ஆகியோர் நடித்திருந்தனர். இது பல நட்சத்திரங்களைக் கொண்ட கடைசி தொன்மவியல் திரைப்படமாகக் குறிப்பிடப்படுகிறது. 

வி.கே. ராமசாமி (V. K. Ramasamy) - ருத்ரதாண்டவம்: 
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த திரைப்படம் தான் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் சிவனாக நடித்து வந்த நேரத்தில் திடீரென வி.கே. ராமசாமி தயாரிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் அவரே சிவனாக நடித்து சமூக கருத்துக்களை பேசியதும் நாகேஷ் உடன் இணைந்து நடத்திய திருவிளையாடலும் ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

ரஜினிகாந்த் (Rajinikanth) - உழைப்பாளி: 
கடந்த 1993 ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் வெளியான படம் உழைப்பாளி இந்த திரைப்படத்தில் சிவன் போல வேடமணிந்துக் கொண்டு ரஜினிகாந்த் நடித்த காமெடி காட்சியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. 

கமல்ஹாசன் (Kamal Haasan) - பம்மல் கே சம்பந்தம்: 
ரஜினிகாந்தை போலவே கமல்ஹாசனும் பம்மல் கே. சம்மந்தம் படத்தின் காமெடி காட்சியில் சிவனாக நடித்திருப்பார். குறிப்பாக வாயில் பபுள்கம் மென்றுக் கொண்டு சிவனாக பேசி கமலின் வசனங்கள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. 

மேலும் படிக்க | ஹீரோவாகும் கிஷோர் ராஜ்குமார்! நாயகி அன்னா பென்! கோயம்பத்தூர் மாப்பிள்ளை பர்ஸ்ட் லுக்!

மேலும் படிக்க | 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய பாட்டு! ரிலீஸிற்கு பின் சூப்பர் ஹிட்-எது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News