Anurag Kashyap Slams Brahmins With Controversial Post: மகாராஜா பட வில்லன் நடிகரும் பாலிவுட் பிரளய இயக்குனருமான அனுராக் கஷ்யப், பிராமணர்களை பற்றி அவதூறாக கூறியுள்ள கருத்து தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக விளங்குபவர் அனுராக் காஷ்யப். இவர் தற்போது பிராமணர்களை பற்றி அவதூறாக கூறியுள்ள கருத்து தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அனுராக் காஷ்யப்:
தமிழ் ரசிகர்களுக்கு ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தெரிந்த முகமாக மாறியவர், அனுராக் காஷ்யப். இந்த படத்தில் பயங்கர வில்லனாக நடித்திருந்த இவரை, பார்த்தவுடன் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழே தெரியவில்லை என்றாலும் சரியாக வாயசைத்து படம் முழுக்க வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார். இதையடுத்து, சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்திலும் சில நிமிடங்களுக்கு விஜய்யின் நண்பராக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த மகாராஜா படத்தில் முக்கிய வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்திருந்தார். மேலும் மக்களின் பாராட்டுகளை பெற்று ரசிகர்களின் அன்பை அள்ளினார்.
அனுராக் காஷ்யப் சர்ச்சை பேச்சு:
பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் என்று அனுராக் காஷ்யப் கூறிய கருத்து தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இவர் இப்படி கூறியதற்கு என்னே காரணம் என்பதை இப்போது காண்போம்.
புலே படத்தால் ஏற்பட்ட சர்ச்சை:
இயக்குநர் அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள திரைப்படம் புலே. இந்த படம் சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படம் ஜோதிராவ் புலேவின் 198வது பிறந்தநாளை (ஏப்ரல் 11) முன்னிட்டு வெளியிட திட்டமிட்பபட்ட நிலையில் படம் வெளிவராமல் 25ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஏனெல் இந்த படத்தில் மகராஷ்டிராவில் உள்ள பிராமணர்களை தவறாக காட்டியிருப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவி்த்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இப்பட்ததிற்கு தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியதுடன் பிராமணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து படத்தின் இயக்குனர் இதற்கு சம்மதம் தெரிவித்து ஒப்புக்கொண்டார்.
கொந்தளித்த இயக்குனர் அனுராக் காஷ்யப்:
இந்நிலையில் இது தொடர்பான விவகாரத்தை தெரிந்துக் கொண்ட அனுராக் காஷ்யப் கடும் கோபத்துடன் தணிக்கை வாரியத்தை திட்டி சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி பிராமண சமூகத்தையும் கேவளமாக பேசியுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்ட அனுராக், இந்தியாவில் சாதிய அமைப்புகள் இல்லை என்றால் ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே அவர்களை பார்த்து பிராமணர்கள் ஏன் கோபம் அடைகின்றனர். படத்தை தணிக்கை குழு வழங்கும் ஒப்புதலை தாண்டி தனிப்பட்ட குழுவினர் படத்தை பார்த்து முடிவு செய்வது நியாயம் இல்லை. மொத்த சிஸ்டமே தவறாக இருக்கிறது. சாதி இல்லையென்றால், நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆனீர்கள்? திரைப்பட சான்றிதழ் வாரியம் ஒரு மோசடி. அனைவரும் கூடி ஒரு முடிவுக்கு வாருங்கள் இந்தியாவில் சாதி உள்ளதா இல்லையா அவர் பதிவிட்டு இருந்தார்.
இதனிடையே பிராமணர்களுக்கு எதிரான அனுராக்கின் கருத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களிடமும் கடுமையாக பேசிய அவர், "நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் உனக்கென்ன பிரச்சனை" என்று பதிவிட்டுள்ளது. இதனால் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ