கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தில் நடித்ததன் மூலம் மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன், விக்ரமின் தங்கலான் போன்ற திரைப்படங்களில் நடித்தார். மற்ற மொழிகளான் இந்தி, கன்னடம், மலையாளம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார். இது மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தும் வருகிறார்.
தற்போது இவர் நடிகர் கார்த்திக்கின் 'சர்தார் 2' படத்தில் கதாநாயகியாகவும், தெலுங்கில் நடிகர் பிரபாஸின் 'தி ராஜா சாப்' என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சில நடிகர்கள் நல்ல பெயர் வாங்குவதற்காக கேமரா முன்பு பெண்கள் பற்றி பெருமையாகவும் கேமராவுக்கு பின்னால் பெண்கள் விஷயத்தில் வேறு மாதிரியாக நடந்து கொள்வதாகவும் அவர் பேசி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, சினிமாவில் சமத்துவம் இல்லை. அதாவது ஆண் ஆதிக்கம் எப்போதுமே முடிவுக்கு வராது என நினைக்கிறேன். சில நடிகர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுகிறார்கள். எனது 5 ஆண்டுகால சினிமா பயணத்தில் பல நடிகர்களிடம் இதை நான் பார்த்திருக்கிறேன். கேமராவுக்கு முன்பாக பெண்கள் குறித்து எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். காஸ்டிங் கவுச் போன்ற சிக்கல்கள் வரும்போது அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.
இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு எப்படி பேச வேண்டும் எப்படி முகமூடி அணிந்து இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிகிறது. எதற்கு இந்த வெளிவேஷம். இந்திய சினிமாவில் ஆண் என்றால் ஒரு மாதிரியாகவும் பெண் என்றால் ஒரு மாதிரியாகவும் பார்ப்பது எப்போது மாறும் என்று எனக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இது மாதிரியான பாகுபாடு எப்போது முடிவுக்கு வருகிறதோ அப்போது தான் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் எனக் கூறினார். பெண்கள் விஷயத்தில் நடிகர்கள் பற்றி பேசிய மாளவிகா மோகனன், அந்த நடிகர்கள் யார் யார் என்பதை அவர் சொல்லவில்லை.
மேலும் படிங்க: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நானி நடிக்கும் HIT: The Third Case!
மேலும் படிங்க: சூர்யாவின் ரெட்ரோ ப்ரீ புக்கிங்.. பொழியும் வசூல் மழை.. எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









