Malavika Mohanan: தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன், இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேட்டியளிதிருந்த இவர், தமிழ் தெலுங்கு நடிகைகள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை முன் வைத்திருந்தார். தற்போது இவரது இந்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன், விக்ரமின் தங்கலான் போன்ற பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பேட்ட, மாஸ்டருக்கு பிறகு அவர் நடித்த எந்தப் படமும் ஹிட்டாகவில்லை. தமிழைத் தவிர இவர் பிற மொழிகளான இந்தி, கன்னடம், மலையாளம் போன்றவற்றிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் அவ்வபோது பல கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் நடிகர் கார்த்திக்கின் 'சர்தார் 2' படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இதை தவிர்த்து அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் கமிட்டாகவில்லை என தெரிகிறது. இதற்கிடையே தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ராஜா சாப் படத்தில் நடித்துள்ளார். இவர் படம் படு தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் பற்றி நடிகை மாளவிகா மோகனன் சமீபத்திய பேட்டியில் ஒன்றில் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அவர், "தமிழ் மற்றும் தெலுங்கில் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சிலருக்கு சரியாக கூட நடிக்க தெரியவில்லை. இந்த நடிகைகள் சோகமான காட்சிகளில் 1,2,3,4 என்று மனதில் எண்ணிக்கொண்டே சோகமான நடிக்கிறார்கள், அதேபோல் கோப காட்சிகளிலும், ரொமான்டிக் காட்சிகளிலும் இப்படி தான் நடிக்கிறார்கள். இந்த நடிகைகள் உதட்டசைவை மட்டும் சரியாக செய்து டப்பிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து நடிக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த நடிகைகள் ஒரு படத்துக்கு மட்டும் இப்படி செய்வதில்லை, அவர்கள் நடிக்கும் அனைத்து படத்திலும் இப்படிதான் செய்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
மாளவிகாவின் இந்த கிளிப் தற்போது கோலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாளவிகாவை கோலிவுட் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
முன்னதாக இது போன்று தமிழ் நடிகையின் பெயரை குறிப்பிடாமல் மருத்துவமனை காட்சியில் மேக்கப்போடு நடிக்கிறார் எப்படி இப்படி நடிக்க முடியும் என்று பேசி இருந்தார். அது ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்த காட்சியை குறிப்பிட்டு இருந்தார் என்று தெரி வந்தது. ஆனால், ட்=இவற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நயன்தாராவும் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









