)
மம்முட்டியின் மகனும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகருமான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது வித்தியாசமான கதை தேர்வுகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார். பல மூத்த நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதிலும் அதனை நிராகரித்துள்ளார். சில முக்கிய படங்களை நிராகரித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக ‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களின் வாய்ப்பை நிராகரித்துள்ளார். துல்கர் சல்மான் நிராகரித்து தோல்வியடைந்த மற்றும் வெற்றி பெற்ற 7 படங்களை பற்றி பார்ப்போம்.

துல்கர் சல்மான் நிராகரித்த படங்கள்
இந்தியன் 2 (Indian 2): ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மான் முதலில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பிறகு அவர் அந்த படத்தை நிராகரித்தார். பின்பு அந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்தார். இந்தியன் 2 படம் வெளியானபோது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய தோல்வியை சந்தித்தது.
தக் லைஃப் (Thug Life): மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைப் என்ற கேங்ஸ்டர் படத்தில், முதலில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானார். ஆனால், பிறகு அந்த படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்தார். பிறகு அந்த கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தார். தக் லைப் படமும் மோசமான தோல்வியை சந்தித்தது.
படே மியான் சோட்டே மியான் (Bade Miyan Chote Miyan): இந்தி சினிமாவில் அக்ஷய் குமார், டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியான படே மியான் சோட்டே மியான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மான் தேர்வானார். ஆனால், சில காரணங்களால் அந்த வாய்ப்பை நிராகரித்தார். இந்த படமும் வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்தது.
மாயநதி (Mayaanadhi): ஆஷிக் அபு இயக்கிய மாயநதி என்ற மலையாள படத்தில் முதலில் துல்கர் சல்மான் நடிக்க இருந்தார். பிறகு இந்த படத்தில் டோவினோ தாமஸ் நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டை பெற்றது.
ஆன்ட் தி ஆஸ்கர் கோஸ் டு (And the Oscar Goes To): சலீம் அஹமது இயக்கிய இந்த மலையாள படத்தில் முதலில் துல்கர் சல்மான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்கள் இந்த படத்தில் இருந்து விலகினார். பிறகு இந்த கதையில் டோவினோ தாமஸ் நடித்தார்.
சம்ராஜ்யம் II (Samrajyam II: Son of Alexander): மம்மூட்டியின் நடிப்பில் 1990ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சம்ராஜ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க துல்கர் சல்மானுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற காரணத்தால் இந்த படத்தை நிராகரித்தார்.
ரிது (Ritu): ஷ்யாமபிரசாத் இயக்கிய இந்த மலையாள படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துல்கர் சல்மான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இதனை துல்கர் நிராகரித்தார். பிறகு அந்த படத்தில் ஆசிஃப் அலி நடித்தார்.
துல்கரின் புத்திசாலித்தனமான தேர்வு
துல்கர் சல்மானின் இந்த முடிவுகள் அவரது கதை தேர்வுகளையும், சினிமாவின் மீதுள்ள அவரது புரிதலையும் எடுத்து காட்டுகிறது. மேலே குறிப்பிட்ட சில படங்களை நிராகரித்து ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தேர்ந்தெடுத்து, தரமான கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அவரது அணுகுமுறை, திரையுலகில் அவரை தனித்துவமாக்குகிறது. பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் தருகிறார் துல்கர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ