Manoj Bharathiraja Unfulfilled Dream: 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இன்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. நீண்ட நாளாக உடல்நலக்குறைவு பாதிக்கப்பட்டிருந்த மனோஜிற்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Manoj Bharathiraja: இன்று மாலை உயிரிழந்தார்
இதையடுத்து, இன்று மாலை 6 மணியளவில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரது உயிர் வரும் வழியிலேயே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தற்போது அவரது உடல் சேத்துப்பட்டில் உள்ள இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
Manoj Bharathiraja: பிரபலங்கள் இரங்கல்
இதை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பிரபலங்களும் மனோஜ் பாரதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
Manoj Bharathiraja: நடிகர் மற்றும் இயக்குநரான மனோஜ் பாரதி
மனோஜ் கடந்த 2006ஆம் ஆண்டில் நடிகை நந்திதாவை திருமணம் செய்துள்ளார். மனோஜ் - நந்திதா ஜோடிக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதனி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனோஜ் பல்வேறு திரைப்படங்களை நடித்திருந்தாலும், தந்தையை போன்று இயக்குநராக வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்து வந்துள்ளது.
அது கடந்தாண்டுதான் நிறைவேறியது எனலாம். இயக்குநர் சுசீந்திரனின் தயாரிப்பில் "மார்கழி திங்கள்" என்ற திரைப்படத்தை மனோஜ் இயக்கியிருந்தார். மனோஜ் நடிப்பில் தாஜ் மஹால், வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நல்ல அடையாளத்தை கொடுத்தாலும் பெரியளவில் அவரால் வரவேற்பை பெற முடியவில்லை. இது மனோஜ் மற்றும் பாரதிராஜா இருவருக்குமே சற்று மன வருத்தத்தை அளித்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Manoj Bharathiraja: உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்
இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டோரிடம் மனோஜ் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக, பம்பாய் படத்தில் மணிரத்னிடம் பணியாற்ற தொடங்கி உள்ளார். ஷங்கரிடம் எந்திரன் படத்திலும் மனோஜ் படத்தில் உள்ளார்.
Manoj Bharathiraja: மணிரத்னம் தான் குருவாம்...
மணிரத்னம்தான் தனது குரு என மனோஜ் பல தருணங்களில் கூறி உள்ளார். அதிலும் இதுதான் சினிமா என தந்தை பாரதிராஜா தனக்கு கற்றுத்தந்ததாகவும், ஆனால் 'இதுதான்டா சினிமா' என காட்டியவர் மணிரத்னம் என மனோஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Manoj Bharathiraja: மிஸ்ஸான சிகப்பு ரோஜாக்கள் 2
மேலும் அவருக்கு பாரதிராஜா - கமல் கூட்டணியில் 1978இல் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க வேண்டும் என ஆசை மனோஜ் பாரதிராஜாவுக்கு நீண்ட நாள்களாக இருந்துள்ளது. ஆனால், அந்த படம் வெறும் பேச்சளவிலேயே நின்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கடைசி வரை மனோஜ் பாரதிராஜாவின் அந்த ஆசை நிறைவேறாமலே போய்விட்டது என்பதுதான் மிகவும் சங்கடமான ஒன்றாகும்.
Manoj Bharathiraja: சென்று வாருங்கள் மனோஜ் பாரதி
'எங்கே அந்த வெண்ணிலா...', 'சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்', 'சொல்லாயோ சோலை கிளி...' போன்ற பாடல்களை கேட்கும்போதெல்லாம் தமிழ் மக்களின் நினைவுகளில் நீங்கள் என்றும் நினைவுக்கூறப்படுவீர்கள் மனோஜ் பாரதி... சென்று வாருங்கள்!
மேலும் படிக்க | Manoj Bharathiraja: நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார் - பிரபலங்கள் இரங்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









