நடிகர் மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48. இவர் பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் ஆவார். இவரது மறைவு தமிழ் திரையிலகத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
.சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி இன்று (மார்ச் 26) நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் திரையுலக பிரபலங்கலான சூர்யா, அவரது தம்பி கார்த்தி, பிரபு, சரத்குமார், கவுண்டமனி, சத்யராஜ், வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் படிங்க: மனோஜ் பாரதிராஜா மறைவு.. விஜய் முதல் கவுண்டமனி வரை.. அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
இந்த நிலையில், மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மனோத் பாரதிராஜாவுடனான நெருக்கத்தை பகிர்ந்து கொண்டார். மனோஜ் 6 வயது குழந்தையாக இருக்கும்போதில் இருந்தே எனக்கு அவரை தெரியும். நான் வேலை பார்த்த ஹோட்டலில் நீச்சல் பயிற்சி செய்வதற்காக வருவார்.
மனோஜுக்கு பல ஆசை மற்றும் கனவுகள் இருந்தது. மனோஜ் எல்லோருக்கும் நல்லவனாக தனது கஷ்டங்களை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்தது போலவே காட்டிக்கொண்டார். மன அழுத்தத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
இந்த இழப்பு பாரதிராஜாவுக்கு மிகப் பெரியது. இந்த இழப்புக்கு எப்படி ஆறுதல் கூற முடியும். அவரது குடும்பத்தார், குழந்தைகள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என மிகுந்த வருத்தத்துடன் நடிகர் நாசர் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ