May 1st 2025 Movie Releases : 2025ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கான பெரிய படங்கள் வரிசையாக வெளியாகி வருகிறது. அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் பிப்ரவரி மாதமும், குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதத்திலும் வெளியானது. இதைத்தொடர்ந்து மதகஜராஜா, டிராகன், வீர தீர சூரன், குடும்பஸ்தன் உள்ளிட்ட படங்கள் மக்களின் கவனம் ஈர்த்த படங்களாக இருந்தன. இந்த நிலையில், வரும் மே 1ஆம் தேதியும் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வரும் சில திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
ரெட்ரோ:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரெட்ரோ. சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படம், 90களில் நடக்கும் ஒரு கேங்க்ஸ்டர் டிராமா என்று சொல்லப்படுகிறது. இதன் டிரைலரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. அது மட்டுமல்ல, சந்தோஷ் நாராயணன் இசையில் கண்ணாடி பூவே பாடலும் கனிம்மா பாடலும் மக்களை கவர்ந்திருக்கிறது.
சூர்யா நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான ‘கங்குவா’ படம் கவிழ்த்துவிட, ரெட்ரோ படம்தான் அவருக்கு கைக்கொடுத்து தூக்கி விட வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். இப்படம், வரும் மே 1ஆம் தேதி வெளியாகின்றது.
டூரிஸ்ட் ஃபேமிலி:
சசிகுமார்-சிம்ரன் இணைந்து நடித்திருக்கும் படம், டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அபிஷாந்த் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இவருக்கு இது முதல் படமாகும். குட் நைட், லவ்வர் உள்ளிட்ட சில நல்ல ஃபீல் குட் திரைப்படங்களை கொடுத்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்து இருக்கிறது. கொரோனா சமயத்தில், இலங்கையில் வாழும் ஒரு குடும்பம், வாழ்க்கையை நடத்த என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதை காமெடியாக கூறும் கதையாக இருக்கிறது, இந்த படம். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டிரைலரும் பாடல்களும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.
ஹிட் 3 திரைப்படம்:
நானி நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ஹிட்:3. தெலுங்கில், இந்த ஹிட் படத்தின் தொடர்க்கதைகளுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. வெவ்வேறு ஹீரோக்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர், அந்த ஹீரோவின் லிஸ்டில் புதிதாக நானி இணைந்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீனிதி நடித்திருக்கிறார்.
இந்த படத்தை தமிழிலும் ஹிட் ஆக்க நினைக்கும் நானி, இங்கும் ப்ரமோஷன் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறது. இந்த முறை கதை ஜம்மு காஷ்மீரில் நடப்பது போலவும், அதனை விஷாகப்பட்டினத்தில் இருந்து வரும் ஒரு காவல் அதிகாரி தீர்ப்பது போலவும் எழுதப்பட்டுள்ளது.
தன்டர்போல்ட்ஸ்:
இந்தியாவை பொறுத்தவரை, மார்வல்-டிசி உள்ளிட்ட படங்களுக்கு நிறைய ரசிகர்கள் கூட்டமும், இப்படங்கள் குறித்த எதிர்பார்ப்புகளும் இருக்கும். அப்படி, தற்போது மக்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கும் படம்தான், Thunderbolts*. இதில் ஃப்லோரன்ஸ், லூயிஸ் புல்மேன், செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படமும் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆக்ஷன்-த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்காெண்டுள்ளனர்.
மேலும் படிக்க | 3 மாதம்..72 படங்களில் 5 மட்டுமே ஹிட்!! என்ன காரணம் தெரியுமா?
மேலும் படிக்க | சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகும் 4 சூப்பர் ஹிட் படங்கள்! என்னென்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









