இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் 'மெண்டல் மனதில்'. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் பெருமிதமாக பகிர்ந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.
#mentalmanadhil 4th schedule shoot on progress … in the legendary @selvaraghavan sir direction … wait for this particular album . After AO and ME this album will be my most favourite one … pic.twitter.com/MvllVCsJBI
— G.V.Prakash Kumar (@gvprakash) October 9, 2025
முன்னதாக “ஆயிரத்தில் ஒருவன்” மற்றும் “மயக்கம் என்ன” என வெவ்வேறு விதமான களங்களில், இப்போது வரை கொண்டாப்படும் இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி, மீண்டும் இணைந்திருப்பதால், இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஆல்பம் பற்றிய தகவலைப் பகிர்ந்து, அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்து ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது.., “ஜீனியஸ் ஒன் அண்ட் ஒன்லி செல்வராகவன் சாருடன் ஷீட்டிங்கில் இருக்கிறேன். “மெண்டல் மனதில்” என் மனதுக்கு மிக நெருக்கமான படம். இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும்.”
இந்த படத்தின் முதல் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் முதல் சிங்கிள், டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
மேலும் படிக்க: கரூர் விவகாரம்..விஜய்க்கு பயமா? நண்பர் சஞ்சீவ் கொடுத்த பதில்!
மேலும் படிக்க: Dude Trailer : பிரதீப் ரங்கநாதனின் ‘ட்யூட்’ படத்தின் ட்ரெயிலர் எப்படி இருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









