Loss For Karnataka Kamalk Thug Life Not Get Released : தக் லைஃப் திரைப்படம், கர்நாடாகவில் வெளியாகுமா இல்லையா என்கிற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், இந்த படத்தால் கர்நாடகாவிற்குதான் பிரச்சனை என்று கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Loss For Karnataka Kamalk Thug Life Not Get Released : கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் பிரச்சினை ரிலீஸ் தடை வரை சென்றிருக்கும் நிலையில், இதனால் உண்மையாக பாதிக்கப்பட போவது யார் என்பது குறித்த விவாதம் இணையத்தில் எழுந்திருக்கிறது. மேலும், இதனால் கமல்ஹாசனுக்கு எந்த பிரச்சனையும் வராது என்றும், கர்நாடகாவிற்குதான் பிரச்சினை என்றும் கூறப்படுகிறது. இது குறித்த முழுவிவரத்தை இங்கு பார்ப்போம்.
தக் லைஃப் திரைப்படம்:
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் 38 வருடங்கள் கழித்து நடித்திருக்கும் படம், தக் லைஃப். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமலுக்கு இணையாக சிம்பு நடித்திருக்கிறார். இவர்களுடன், த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் உருவாகி இருக்கின்றன.
கமல்ஹாசன் இந்த படத்தில், ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் வரும் ஜூன் 5ஆம் தேதி இந்திய அளவில் வெளியாகிறது.
மொழி சர்ச்சை:
தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்டார். கமல்ஹாசன் மேடையில் அவர் குறித்து பேசும்போது, “பேச்சு ஆரம்பிக்கும் போது உயிரே தமிழே உறவே என்று கூறினேன். தமிழிலிருந்து தோன்றியதுதான் கன்னடம். எனவே அவரையும் உயிர் என்று குறிப்பிட்டேன்” என கூறினார்.
கமலின் இந்த பேச்சு, கன்னடர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டால்தான், தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளிப்போம் என்று கூறினார். ஆனால் கமல், தான் எதையும் தவறாக பேசவில்லை என்றும், அப்படி இருக்கும் பட்சத்தில் தான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டார். கமல் மன்னிப்பு கேட்க மறுத்ததோடு, தன் பேச்சை சரி என கூறியது கன்னடர்களின் கோபத்தை இன்னும் தோண்டிவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு:
தக் லைஃப் திரைப்படத்தை சுமூகமாக கர்நாடகாவில் வெளியிட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, நடிகர் கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்ததையொட்டி, நீதிபதிகள் கமல்ஹாசனை நோக்கி சரமாரியான கேள்விகளை தொடுத்தனர். “நீங்கள் மொழியாளரா அல்லது வரலாற்று அறிஞரா, இந்த பிரச்சனையை ஒரு மன்னிப்புடன் தீர்த்திருக்கலாம் ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை” என்று கூறினர்.
தன் பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் இது தனக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் கமல்ஹாசன் ஒரு கடிதத்தை கர்நாடக ஆளுநருக்கு எழுதினார். அதிலும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. ஜூன் 5ஆம் தேதி படம் வெளியிடப்படாது என்று தெரிவித்திருக்கிறார்.
யாருக்கு நஷ்டம்?
தக் லைஃப் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் செயின் மூவிஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை என்றால் இந்த தயாரிப்பு குழுவிற்கு நஷ்டம் வரும் என்ற பேச்சும் இருந்தது. ஆனால் இதற்கு மாறான சில கருத்துக்களும் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
#ThugLife bookings not yet opened in Karnataka
— AmuthaBharathi (@CinemaWithAB) June 2, 2025
If ThugLife gets BANNED in Karnataka, it's going to be a major loss for Karnataka theatres more than RKFI !!
Already the theatres here in Karnataka are surviving, only with other language films. For the past 3 weeks, many single…
கர்நாடகாவில் ஏற்கனவே பல தியேட்டர்கள் நஷ்டத்தில் ஓடி வருவதாக கூறப்படுகிறது. இந்த தியேட்டர்கள், பிறமொழி படங்கள் ரிலீசால்தான் இயங்கி வருகிறதாம். கடந்த மூன்று வாரங்களில் சிங்கிள் ஸ்கிரீன் இருக்கும் பல தியேட்டர்கள், பெரிய பட ரிலீஸ்கள் எதுவும் இல்லாமல் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனவே, தக் லைஃப் படம் இப்போது வெளியாகவில்லை என்றால் இந்த தியேட்டர்களின் நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை. இது கமலுக்கு ஏற்படுத்தும் நஷ்டத்தை விட, கர்நாடக தியேட்டர்களுக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ