)
தமிழ் திரையுலகில் டாப் இயக்குநராக இருப்பவர், அட்லீ. ஜவான் படம் மூலம் பாலிவுட் திரையுலகிற்குள் நுழைந்த இவர், தற்போது அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கயுள்ளார். தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க போவது யார் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன்:
தமிழ் திரையுலகில் வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், வெகு விரைவில் டாப் இயக்குநராக மாறியவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் இயக்கியதே 4 படம்தான். அதிலும் மூன்று படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க அடுத்ததாக ஷாருக்கானிற்கு குறி வைத்தார். அட்லீயை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது, ஜவான் திரைப்படம். இப்படம், சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது டோலிவுட்டில் நுழைய திட்டமிட்ட அட்லீ அல்லு அர்ஜுன் வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அல்லு அர்ஜுன் (Allu Arjun) ஹீரோவாக நடிக்கிறார். இது அல்லு அர்ஜுனின் 22வது படமும், அட்லீயின் (Atlee) 6வது படமாகும். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்கவுள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இது தொடர்பான பிரம்மாண்ட அறிவிப்பு வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டது.
இவர்தான் நாயகியா?
இதனிடையே இந்த படத்தில் யார் ஹீரோயினாக நடிக்க இருப்பது என்பது குறித்த தகவல் கசந்தது. அதன்படி சமந்தா இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது மிருணாள் தாகூர் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிருணாள் தாகூர்
வட இந்தியாவை சேர்ந்த நடிகை மிருணால் தாகூர், லவ் சோனியா என்ற இந்தி படம் மூலம் முதன்முறையாக திரையுலகிற்குள் நுழைந்தார். அதற்கு முன்னர் கும் கும் பாக்யா (இனிய இரு மலர்கள்) தொடரில் நாயகிகளுள் ஒருவராக நடித்தார். 2022ஆம் ஆண்டு, சீதா ராமம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் இவர் தென்னிந்திய திரையுலகத்திற்கு அறிமுகமானார். இதில் இவர் துல்கர் சல்மானுக்கு ஜாேடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நடித்திருந்த ‘சீதா மாகாலட்சுமி’ கதாப்பாத்திரம் தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தது. கடந்த ஆண்டு இவர் நானிக்கு ஜோடியாக நடித்த ‘ஹாய் நன்னா’ திரைப்படமும் நல்ல வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ