)
Parking Movie Crew Cake Cutting: பார்க்கிங் படத்திற்கு மூன்று தேசிய விருதுகளை வென்றுவிட்டதால், படக்குழு இதை கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது ஹரிஷ் கல்யாணும் எம்.எஸ் பாஸ்கரும் செய்தி செயல் வைரலாகி வருகிறது.
பார்க்கிங் திரைப்படம்:
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் பார்க்கிங். நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தங்கள் வீட்டின் முன் வாகனம் நிறுத்தும் இடத்திற்காக சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு மனிதர்களைச் சுற்றி நிகழும், ஒரு இறுக்கமான, மிக யதார்த்தமான கதையைச் சொல்கிறது. மேலும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் இருவரும் நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள்.
ஒரு அழுத்தமான கதையை பொழுதுபோக்கு வகையில் அழகாக சொல்லியுள்ள இந்தப் படம், பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் நிச்சயம் சந்தித்திருக்கும் இதே போன்ற நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில், மிக அற்புதமான படைப்பாக அமைந்திருந்தது. பார்க்கிங் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்திருந்தார், ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
எளிமையான திரைக்கதையில் கதாபாத்திரங்கலின் உளவியலை மிக ஆழமாக வெளிப்படுத்திய பார்க்கிங் படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் வசூலையும் அள்ளி குவித்தது.
மூன்று தேசிய விருது:
இதனிடையே 71 வது தேசிய விருதுகள் சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வெளியான பார்க்கிங் படம் மூன்று விருதுகளை வென்றது. அதன்படி சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என மூன்று விருதுகளை படம் வென்றது. அதன்படி துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கருக்கு தேசியவிருது மிகவும் பொருத்தமாக அளிக்கப்பட்டுள்ளது.
#பார்க்கிங் படத்துக்காக தேசிய விருது பெற்ற கலைமாமணி
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 1, 2025
எம்.எஸ்.பாஸ்கர்#MSBhaskar #NationalAwards2023 #NationalFilmAwards #NationalFilmAwards2025 pic.twitter.com/8yaR3hfxQv
கேக் வெட்டி கொண்டாட்டம்:
இந்நிலையில் தற்போது பார்க்கிங் படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுவிட்டதால், படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது ஹரிஷ் கல்யாணும் எம்.எஸ் பாஸ்கரும் எப்படி படத்தில் இருந்தார்களோ அதே போல், கேக் வெட்டும் போதும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு, தாக்குவது போல் செய்தார்கள். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#HarishKalyan and #MSBhaskar's Ego Clash Fun at #Parking National Awards Celebration..
— Laxmi Kanth (@iammoviebuff007) August 5, 2025
pic.twitter.com/3Q5y11PYGY
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ