Murmu Director Hemanthnarayan About Fake Reviews : தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக "மர்மர்" உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இந்தத் திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது.
தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மர்மர் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில், படத்தின் இயக்குநரிடம் படத்திற்கு இன்ஸ்டா இன்ஃப்ளூவன்ஸர்ஸை வைத்து பொய்யாக ப்ரமோஷனை கொடுத்ததாக ஒரு நிருபர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் சொன்ன இயக்குநர் ஹேம்நாத், “நாங்கள் தினமும் லைவாக ஆடியன்ஸை தியேட்டருக்கு சென்று சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். அவர்களின் விமர்சனத்தை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாேம். நாங்கள் ஃபேக் ப்ரமோஷன் செய்கிறோம் என்று சொன்னது போல, இன்னும் சிலரும் படத்திற்கு எதிராக ஃபேக் ப்ரமோஷன் செய்து வருகின்றனர். வேண்டும் என்றால், நீங்களே வெவ்வேறு விதமான வயது வித்தியாசத்தில் 150 பேரை அழைத்து வாருங்கள், படம் போட்டு காண்பிக்கிறோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்” என்று சவால் விட்டார்.
இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஜேசன் வில்லியம்ஸ் மேற்கொள்ள ஒலி வடிவமைப்பு பணிகளை கெவின் ஃபிரடெரிக் மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரோஹித் மேற்கொண்டுள்ளார்.
மர்மர் திரைப்படத்தின் விநியோகஸ்தர் குகன் கூறும் போது, "த்திரிகை பார்க்க மேடைகளும் இல்லை, சினிமாத்துறை பார்க்காத கலைஞர்களும் இல்லை. அப்படி வந்த மர்மர் குழுவினரை நேற்று பிறந்த குழந்தையாகத் தான் நான் பார்க்கிறேன். இந்த மேடையை மிகவும் முக்கியமானதாக பார்க்கிறேன். ஏன் என்று நான் உங்களுக்கு சொல்கிறன். நூற்றாண்டுகளை கடந்த சினிமாத் துறையில் மர்மர் குழு புதிதாக வந்த குழந்தை தான்.
படத்தின் விளம்பர பணிகள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. இந்தப் படத்தின் தோற்றம், கதைக் கரு என எல்லாமே புதிதாக இருந்தது. தமிழ் திரையுலகில் இது பெரிய வரவேற்பு. உங்களின் கைத்தட்டல் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தப் படத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு, படத்தை கொண்டு வந்த சேர்த்ததில் எஸ்.பி.கே. புரொடக்ஷன்ஸ் பெரிய விஷயம்” என்று கூறினார்.
மேலும் படிக்க | தமிழ் திரையுலகில் முதல்முறை..! வேற லெவல் அனுபவம் கொடுக்கும் மர்மர் டிரெய்லர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









