)
Anirudh Relationships Before Kavya : மக்கள் மத்தியில் பிரபலமான நபராக ஒருவர் இருக்கிறார் என்றாலே, அவரை சுற்றி, அவருக்கே புதிதாக இருக்கும் வதந்திகள் பரவுவது உண்மைதான். குறிப்பாக, திரையுலகில் இருப்பவர்கள் இது போன்ற காதல் அல்லது திருமண வதந்திகளை அதிகம் எதிர்கொள்கின்றனர். அப்படி, சமீபத்தில் திருமண வதந்தியில் சிக்கியவர், நம்ம அனிருத்.
அனிருத் காவ்யா மாறன் திருமணம்?
இந்திய திரையுலகின் ஸ்டார் இசையமைப்பாளராக இருக்கிறார், அனிருத். தமிழில், ‘Why This Kolaveri’ பாடலில் ஆரம்பித்து, இன்று தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளுக்கும் மாறி மாறி இசையமைத்து வருகிறார். இவரும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரும் சன் நெட்வர்க் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யாவும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் விரைவில் திருமண பந்தத்திற்குள் இணைய இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது.
நிலைமை கைமீறி போகும் முன்பு, அனிருத் தானாக முன்வந்து தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்த பதிவை வெளியிட்டார். அதில், “திருமணமா? யாரும் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம்..” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இது குறித்த தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போது காவ்யா மாறனுடனான திருமண வதந்தியில் சிக்கியது போல, இதற்கு முன்னரும் அனிரும் சில பிரபலங்களுடன் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். அப்படி சிக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
ஆண்ட்ரியா:
அனிருத்-ஆண்ட்ரியாவின் திருமண சர்ச்சை குறித்து தெரிந்து கொள்ளாத ஆளே இல்லை. சுச்சி லீக்ஸ் பிரச்சனையில் ஹைலைட்டாக தெரிந்ததே இவர்களின் நெருக்கமான பாேட்டோக்கள்தான். ஒரு பார்ட்டியில் இருவரும் இருந்த புகைப்படங்கள் வைரலாக ஆரம்பித்தது. அது மட்டும் இல்லாமல் அனிருத்துக்கும் ஆண்ட்ரியாவிற்கும் 5 வயது வித்தியாசமும் இருந்தது. நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் உறவு, பின்பு பிரேக்-அப்பில் முடிந்தது.
கீர்த்தி சுரேஷ்:
சமீபத்தில் திருமணம் முடித்த கீர்த்தி சுரேஷின் பல படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இவர்கள் நல்ல நண்பர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. ஜவான் படம் வெளியான சமயத்தில், அனிருத் யார் என்பது குறித்து வட இந்தியர்கள் அதிக அளவில் தேடி வந்தனர். அப்போது, பாலிவுட் மீடியாக்களின் கைகளில் அனிருத்தும் கீர்த்தியும் மகிழ்ச்சியாக ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படம் சிக்கியது. அதை கையில் வைத்துக்கொண்டு இருவரும் காதலித்து வருவதாக வதந்திகளை பரப்பினர். பின்பு, கீர்த்தி தனது நெடுங்கால காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொள்ள இருப்பதை அறிவித்து விட்டார்.
ஜொனிடா:
டாக்டர் படத்தில் இடம் பெற்றிருந்த செல்லம்மா செல்லம்மா பாடல் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாவர் ஜொனிடா. இவர் இதில் பிரபலமாக காரணம், இப்பாடலின் மேக்கிங்கில் அவர் அனிருத்துடன் சேர்ந்து பாடிய காட்சிகள்தான். அது மட்டுமன்றி, அடுத்தடுத்து தனது படங்களில் அனிருத் அவரை பாட வைத்தார். இதனால் இருவருக்குள்ளும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. ஆனால், இதற்கு இவர்கள் இருவருமே செவி சாய்க்கவில்லை.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:
2 ஆண்டுகளுக்கு முன்பு, தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரிவு செய்தி பெரிய ஷாக்காக ரசிகர்கள் மத்தியில் வந்திரங்கியது. இந்த சமயத்தில் பலர், இருவரின் விவாகரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என பல்வேறு வீடியோக்களையும், வதந்திகளையும் பரவ செய்தனர். அப்படி அவர்கள் பரப்பி விட்ட ஒரு செய்தி, இந்த விவாகரத்துக்கு அனிருத் காரணம் என்பதுதான். அனிருத், ஐஸ்வர்யாவின் சகோதர முறை உறவு கொண்டவர். அது மட்டும் இல்லாமல், அனிருத் தனுஷுக்கும் நெருக்கமான நண்பராக இருந்திருக்கிறார். இந்த வதந்தியை வேண்டுமென்றே சில விஷமிகள் பரப்பியதாக கூறப்படுகிறது.
காவ்யா மாறன்:
தற்போது காவ்யாவும் அனிருத்தும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அவர்கள் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ