)
Anirudh Upcoming Movie Line Ups : தமிழ் திரையுலகில் டாப் இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருக்கிறார், அனிருத். தற்போது பெரிய இடத்தில் இருக்கும் இவர், அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இது குறித்த முழு விவரங்களை, இங்கு பார்ப்போம்.
டாப் இசைமயமைப்பாளர் அனிருத்:
தமிழில், ‘3’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அனிருத். அந்த படம் கொடுத்த தொடக்கம், அவரை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பது அப்போதே தெரிந்து விட்டது. தமிழில், ரஜினிகாந்த் முதல் விஜய்-அஜித் வரை பலரது ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
படத்தில் அனிருத்தின் இசை எனும் நிலை மாறி, இப்போது அனிருத்தின் இசைதான் படமே என்கிற நிலை வந்து விட்டது. ஜவான் படம் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்த இவர், இப்போது அங்கும் ஹிட் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
சாய் அபயங்கர்-அனிருத் போட்டி:
தற்போது, தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருக்கிறார், சாய் அபயங்கர். இவரது முதல் படமான ‘ட்யூட்’ வெளியானது. இதற்கு முன்னரே அவர் தொடர்ந்து கருப்பு, அல்லு அர்ஜுனின் படம் என பல ப்ராஜெக்ட்களில் கமிட்டாகியிருக்கிறார். இவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானதை தொடர்ந்து பலர் இவர் அனிருத்திற்கு போட்டியாக வந்து விட்டதாக பேசினர். ஆனால், அனிருத்தின் லைன்-அப் குறித்த தகவல், அப்படி பேசுபவர்களை வாயடைக்க வைத்துள்ளது.
அனிருத்தின் படங்கள்:
விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். இப்படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் ஜனநாயகன் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதற்கு முன்னரே கத்தி, லியோ, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் அனிருத் கைக்கோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் உருவாகி வரும் ஃபேண்டசி படம், மேஜிக். இந்த படத்தை கௌதம் தின்னானுரி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நானி நடிக்கும் தெலுங்கு படம், தி பேரடைஸ். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஓடெல்லா இயக்கி வருகிறார். இந்த படத்திற்கும் அனிருத்தான் இசை.
யாஷ் நடிக்கும் படம் டாக்சிக் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை, கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இந்த படம், டார்க் ஆன த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்கிறார். இந்த படத்தின் பெயர் DC. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம், அடுத்த ஆண்டு வெளியாகிறது.
சிலம்பரசனுடன் அனிருத் முதன்முறையாக கைக்கோர்த்திருக்கும் படம், அரசன். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இதன் டைட்டில் டீசருக்கு அனிருத் போட்டிருந்த மெட்டு, இப்போது பலரது காலர் ட்யூனாக உள்ளது.
அஜித்தின் 64வது படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்திற்கு, அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், ஷாருக்கான் நடிக்கும் கிங் படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ