)
Anirudh Ravichander Wedding Father Answer : தென்னிந்திய திரையுலகில், தற்போது டாப் இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர், அனிருத். சிங்கிளாக வலம் வரும் இவரை சுற்றி அவ்வப்போது திருமணம் குறித்த வதந்திகளும் வலம் வருவதுண்டு. இந்த நிலையில், அவரது கல்யாணம் குறித்து அவரது தந்தையே பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
17 வயதில் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அனிருத். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உறவினர் முறை சகோதரர் ஆன இவர், ‘Why This Kolaveri’ பாடல் மூலம் ஹிட் இசையமைப்பாளராக மாறினார். இதைத்தொடர்ந்து, அவர் மியூசிக் போட்ட திரைப்படங்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது.
அனிருத்திற்கு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், விஜய், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்த அனிருத், இப்போது டாப் ஸ்டார்கள் படங்களுக்கு இசையமைக்கும் ராக் ஸ்டாராக இருக்கிறார்.
அனிருத்தை சுற்றி, சில சமயங்களில் கிசுகிசுக்கள் பரவுவதுண்டு. எப்போது, சுச்சி லீக்ஸில் ஆண்ட்ரியாவுடனான முத்த போட்டோ வெளியானதை தொடர்ந்து, இவர்களின் காதலும் உறுதியானது. ஆனால், இந்த உறவு சில மாதங்களிலேயே பிரேக்-அப்பில் முடிந்தது.
சமீபத்தில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரும், கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனுக்கும் அனிருத்திற்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து அனிருத் “எனக்கு கல்யாணம் எல்லாம் இல்லை” என்று பதிவை வெளியிட்டு விளக்கம் தெரிவித்தார்.
திருமணம் எப்போது?
எந்த பிரபலம் சிங்கிளாக இருந்தாலும் அவர்களை சுற்றி காதல் கிசுகிசுக்களும், திருமண வதந்திகளும் பரவுவது வழக்கம். அதற்குதான் தற்போது அனிருத்தும் பலிகடாவாகி இருக்கிறார். அனிருத்தின் திருமணம் குறித்து அவரிடம் கேட்கிறார்களோ இல்லையோ, அவரது தந்தையும் நடிகருமான ரவிச்சந்தரிடம் எங்கு சென்றாலும் கேட்கின்றனர்.
சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது. அதை முதல்நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக அனிருத் தந்தை ரவிச்சந்தர் வந்திருந்தார். அப்போது அவரிடம் அனிருத்தின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொடுத்துள்ள பதில் பலரையும் சிரிக்க வைத்தது.
தந்தை சொன்ன பதில்!
அனிருத்திற்கு திருமணம் எப்போது என்று கேட்ட போது, அவர் “அது பற்றி எனக்கே தெரியவில்லை. நானே உங்களிடம் கேட்கலாம் என்று இருந்தேன். உங்களுக்கு தெரிந்தால், என்னிடம் வந்து கட்டாயம் சொல்லுங்கள்” என்று கூறியிருந்தார். இது, பிரபலங்கள் குறித்து எப்போதும் மோப்பம் பிடிக்க காத்திருக்கும் மீடியாக்களின் மூக்கை உடைத்தது போல இருந்தது.
அனிருத்தின் சமீபத்திய படங்கள்..
அனிருத் இசையில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது. தற்போது, விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் படத்திலும் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கும் இவர்தான் இசை. சில படங்களில் பாடல் மட்டும் பாடி இருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ